Published:Updated:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, பிப்.21,2011

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையுடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ##~~##

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சாதனைகள் பெருமிதம் தருவதாக அமைந்துள்ள எனக் குறிப்பிட்ட அவர், டெல்லி மக்களின் விருந்தோம்பல் பண்பின் சிறப்பையும் எடுத்துரைத்தார்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இக்கூட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.