Published:Updated:

தீப்பெட்டித் தொழிலுக்குக் கைகொடுக்குமா தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள்

''தமிழகத்தில் தொழில்களைப் பாதுகாக்கும் எண்ணம் எந்த அமைச்சருக்கும் இல்லை. தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க பரிந்துரைசெய்துள்ளதாகக் கூறும் தமிழக அமைச்சர்கள், கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறார்கள்'' என கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தீப்பெட்டித் தொழில் அதிகம் நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம், தீப்பெட்டித் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச  ஊதிய உயர்வு கேட்டு 15 நாள்களுக்கு மேல் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், போராட்டம் கைவிடப்பட்டது. அரசின் பல்வேறு கொள்கைகளால் தீப்பெட்டித் தொழில் நசிவைச் சந்திக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.கோவில்பட்டியில், செய்தியாளர்களைச் சந்தித்த நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் சேதுரத்தினம்,  ''தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களை அரசு கொள்முதல்செய்து, நியாயமான விலையில், ‛சிட்கோ’ மூலம் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். தீப்பெட்டித் தொழில் நலிவடைந்ததால், இதை நலிவடைந்த தொழில் எனக் காரணம் காட்டி, கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவித்துவருகின்றன. 

மாநில அரசு, சிட்கோ அல்லது டிக் மூலமாக நீண்ட காலக் கடன்களை  மானியத்துடன் வழங்க வேண்டும். தீப்பெட்டி தயாரித்தலுக்கான மூலப்பொருள்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு காரணமாக, தீப்பெட்டியின் அடக்கச் செலவும் கூடுகிறது. வட மாநிலங்களில் சரியான விற்பனை வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது. கோடைகாலம் வந்துவிட்டதால்,  தீப்பெட்டி பண்டல்களைப் பாதுகாப்பதில் அதிக சிரமம் ஏற்படும். இதனால், அதிக  விபத்துகள் ஏற்படக்கூடும். இத்தனை இன்னல்களுக்கும் மத்தியில், தொடர்ந்து தீப்பெட்டித் தொழில் நடத்த வேண்டுமா என்கின்ற கேள்வி எழுகிறது" என்றார் வேதனையுடன்.