புதுடெல்லி, பிப்.25,2011
அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்திருப்பது, சாமானியனின் ரயில்வே பட்ஜெட் என பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ##~~##
பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படாததது, பணவீக்கம் குறைய வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "இது சாமானியனின் பட்ஜெட். பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இது பணவீக்கம் குறைய உறுதுணைபுரியும். ரயில்வே அமைச்சர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்," என்றார்.