Published:Updated:

மே.வ. தேர்தல் அறிக்கையே ரயில்வே பட்ஜெட்:பிஜேபி

புதுடெல்லி, பிப்.25,2011

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை, மேற்கு வங்கத்தின் தேர்தல் அறிக்கை என்று சாடி கருத்து தெரிவித்துள்ளது பிஜேபி. ##~~##

2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிஜேபி பொதுச் செயலாளர் ஆனந்த குமார், "மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. இது முழுக்க முழுக்க மேற்கு வங்கத்தையே மையப்படுத்தியுள்ளது. ஏனைய இந்திய மாநிலங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன," என்றார்.

ரயில்வே பட்ஜெட் அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட வேண்டும் என்ற அவர், நாடு முழுவதும் சமநிலையான உட்கட்டமைப்பு மேம்பாடு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்," என்றார் அவர்.

"இந்த பட்ஜெட்டால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் இல்லை," என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா.