Published:Updated:

ரயில்வே பட்ஜெட் : பயணச் சலுகைகள்

புதுடெல்லி, பிப்ரவரி 25, 2011

நாடாளுமன்றத்தில் 2011-12 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதில், அறிவிக்கப்பட்ட பயணச் சலுகைகள் விவரம்:  ##~~##

* மாற்றுத்திறன் படைத்தோருக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் சலுகைகள் விஸ்தரிக்கப்படும்.

* இதுவரை பெண்களில் 60 வயதானவர்களுக்கு மூத்த குடிமகள் என்ற அந்தஸ்து ரயில் பயணங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்த வயது வரம்பு தற்போது 58 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.

* ஆண்களில் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.

* பத்திரிகையாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு இருமுறை 50 சதவீத கட்டணச் சலுகைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* கீர்த்தி மற்றும் சௌரிய சக்ரா விருது பெற்றவர்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படவுள்ளன. பரம்பீர் சக்ரா மற்றும் போரில் இறந்த பின் வழங்கப்பட்ட பரம்பீர், அசோக் சக்கரா விருதுகளை பெற்றவர்களின் பெற்றோர்களுக்கு கார்டு பாஸ் வசதிகள் வழங்கப்படும்.