Published:Updated:

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பிரச்னை எழுப்ப பா.ஜ.முடிவு

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பிரச்னை எழுப்ப பா.ஜ.முடிவு
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பிரச்னை எழுப்ப பா.ஜ.முடிவு
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பிரச்னை எழுப்ப பா.ஜ.முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை எழுப்ப பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.

26 ஆம் தேதி ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொருளாதார ஆய்வறிக்கையையும், 28 ஆம் தேதி பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் மக்களை கவருகிற விதத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிப்பதற்காக மக்களவை சபாநாயகர் மீராகுமார் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.

##~~##
இந்த கூட்டத்தில் பேசிய மீரா குமார், நாடாளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், "நாடு பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த தருணத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.அரசாங்கம் அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளது" என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
பா.ஜ. ஆலோசனை

இதன்டையே நேற்று மாலை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரம்,பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பு,விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

மேலும் காவித் தீவிரவாதம் என்ற கருத்தை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே திரும்பப் பெற வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.