Published:Updated:

முல்லைப் பெரியாறு அணையை மீண்டும் கையில் எடுத்தது கேரளா

Vikatan Correspondent
முல்லைப் பெரியாறு அணையை மீண்டும் கையில் எடுத்தது கேரளா
முல்லைப் பெரியாறு அணையை மீண்டும் கையில் எடுத்தது கேரளா
முல்லைப் பெரியாறு அணையை மீண்டும் கையில் எடுத்தது கேரளா

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட கேரளா அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில் கேரளா அரசின்  இந்த நடவடிக்கையால் தமிழகத்தி்ல் மீண்டு்ம் கொந்தளி்ப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள சட்டசபையில் 2013-2014ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.எம். மானி தாக்கல் செய்தார்.

##~~##
அதில், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை வாங்கி 3 மாதத்திற்குள் மறு விற்பனை செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் என்றும் பட்ஜெட் கூறப்பட்டுள்ளது.