தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கவலையளிக்கக்கூடிய முக்கியமான அம்சம், கடன் தொகை

உயர்ந்திருப்பதுதான். ‘வரியில்லா பட்ஜெட்’ என்று தமிழக அரசு மார்தட்டிக்கொண்டாலும், தமிழகத்தின் கடன் சுமை 3.56 லட்சம் கோடி ரூபாய் என்று உயர்ந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்று. 2006-ம் ஆண்டில் 57,457 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் தொகை, 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசு சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிறது என்றால், கிட்டத்தட்ட அதில் பாதித்தொகை, அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், ‘மானிய விலையில் ஸ்கூட்டர்’ உள்ளிட்ட இலவசத் திட்டங்களுக்குமே போய்விடுகிறது. மீதித் தொகையில் அரசு ஊழியர் சம்பளம் உள்ளிட்டவற்றுக்குச் செலவழித்தது போக, மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு வானத்தைப் பார்க்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடிகளுடன்தான் ஆண்டுதோறும் ‘பட்ஜெட் தாக்கல்’ என்பது ஒரு சடங்குபோல நிகழ்கிறது.

இப்போது நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஆண்டுதோறும் பலமடங்கில் கடன் சுமை அதிகரிக்கிறதே, இதைத் தவிர்ப்பதற்கோ... தடுப்பதற்கோ தமிழக அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டுவிட்டு, புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது யாரை ஏமாற்ற? கையிருப்பில் தொகையே இல்லாதபோது, இந்தப் புதிய திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?

கேள்விகளை எழுப்பினால், ‘இதற்குக் காரணம் தி.மு.க ஆட்சிதான்...’, ‘இல்லையில்லை அ.தி.மு.க ஆட்சிதான்’ என்று மாறி மாறி இரு கழகங்களுமே கைநீட்டிக் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், மக்கள் வரியாக வழங்கும் நிதியை, ஓட்டு அரசியலுக்காக ‘இலவசம்’ என்கிற பெயரில் வாரி வீசுவதிலேயே இரு கழகங்களும் குறியாக இருக்கின்றன. இந்தத் திட்டங்களாவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டால், பெரும்பாலும் ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தைச் சட்டசபையில் மாட்டுவதற்கே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ரூ. 20 கோடி, மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு ரூ. 51 கோடி என்று ஒதுக்கியிருக்கிறார்கள் பட்ஜெட்டில். தனிப்பட்டமுறையில் தங்கள் கட்சித் தலைவியின் நினைவைப் போற்றுவதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க-வினர் ஈடுபடுவதில் நமக்குக் கவலையில்லை. ஆனால், சட்டரீதியான சர்ச்சைகள் இருக்கும்நிலையில் மக்களின் வரிப்பணத்தில் நினைவு இல்லம், நினைவு மண்டபம் அமைப்பது எந்தவகையிலும் நியாயமானது அல்ல.

‘கடன்’ என்ற தமிழ்ச்சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறும் அரசுகளால் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போவது வெட்கப்பட வேண்டிய, வேதனையளிக்கக்கூடிய ஒன்று.