Published:Updated:

இடைக்கால நிதியமைச்சரானார் பியூஷ் கோயல்! -குடியரசுத் தலைவர் அறிவிப்பு

இடைக்கால நிதியமைச்சரானார் பியூஷ் கோயல்! -குடியரசுத் தலைவர் அறிவிப்பு
இடைக்கால நிதியமைச்சரானார் பியூஷ் கோயல்! -குடியரசுத் தலைவர் அறிவிப்பு

உடல்நல குறைவால் மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி (வயது 66) பாதிக்கப்பட்டு உள்ளார் . அவருக்கு முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் காரணமாக  அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 13 -ந் தேதி சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார். மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 -ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.  இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய அவர் இந்தியா வருவார் என்று தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.

இதில் திடீர் திருப்பமாக தற்போது இடைக்கால நிதியமைச்சர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் பரிந்துரைப்படி, இடைக்கால நிதியமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1  -ம் தேதி மத்திய பட்ஜெட்  தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. மேலும், அருண் ஜெட்லி குணமடைந்து திரும்பும் வரை  இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி நிதியமைச்சராகப் பொறுப்பு ஏற்கும் வரையில் நிதித்துறை பியூஷ் கோயல் வசம் இருக்கும்.