Published:Updated:

`முழு பட்ஜெட் அல்ல; இடைக்கால பட்ஜெட்தான்!’ - நிதியமைச்சகம் திட்டவட்டம்

அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவர்வதற்கான அம்சங்கள் நிறைந்திருக்கும். மற்றபடி, தேர்தலுக்கு முந்தைய குறுகிய காலத்துக்கான பட்ஜெட்டாக மட்டுமே இது இருக்கும்.

`முழு பட்ஜெட் அல்ல; இடைக்கால பட்ஜெட்தான்!’ - நிதியமைச்சகம் திட்டவட்டம்
`முழு பட்ஜெட் அல்ல; இடைக்கால பட்ஜெட்தான்!’ - நிதியமைச்சகம் திட்டவட்டம்

வரும் பிப்ரவரி முதல் தேதியில் `முழுமையான பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படவுள்ளதாக வந்த செய்தியை நிதித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

`முழு பட்ஜெட் அல்ல; இடைக்கால பட்ஜெட்தான்!’ - நிதியமைச்சகம் திட்டவட்டம்

இந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் சூழலில், தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக இருக்க வேண்டும். தற்போது அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவர்வதற்கான அம்சங்கள் நிறைந்திருக்கும். மற்றபடி, தேர்தலுக்கு முந்தைய குறுகிய காலத்துக்கான பட்ஜெட்டாக மட்டுமே இது இருக்கும். தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசாங்கம், மீண்டும் ஒரு பட்ஜெட்டை முழுமையாகத் தாக்கல் செய்து செயல்படுத்தும். இதுதான் வழக்கமான நடைமுறையாகும். 

`முழு பட்ஜெட் அல்ல; இடைக்கால பட்ஜெட்தான்!’ - நிதியமைச்சகம் திட்டவட்டம்

ஆனால், வரவுள்ள பட்ஜெட்டை முழுமையான பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகத்தான் இருக்கும். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் எண்ணமில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற இணையதளத்திலுள்ள காலண்டரிலும்கூட, பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது