Published:Updated:

பிப்ரவரி 8-ல் தமிழக பட்ஜெட்! - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

பிப்ரவரி 8-ல் தமிழக பட்ஜெட்! - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
பிப்ரவரி 8-ல் தமிழக பட்ஜெட்! - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது உள்ளிட்ட அறிவிப்புகளை பியூஷ் கோயல் வெளியிட்டார். 

இந்தநிலையில், தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி 8ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.