Published:Updated:

'ஜூலை 9 ல் ரயில்வே பட்ஜெட்; ஜூலை 11 ல் பொது பட்ஜெட் தாக்கல்!'

Vikatan Correspondent
'ஜூலை 9 ல் ரயில்வே பட்ஜெட்; ஜூலை 11 ல் பொது பட்ஜெட் தாக்கல்!'
'ஜூலை 9 ல் ரயில்வே பட்ஜெட்; ஜூலை 11 ல் பொது பட்ஜெட் தாக்கல்!'
'ஜூலை 9 ல் ரயில்வே பட்ஜெட்; ஜூலை 11 ல் பொது பட்ஜெட் தாக்கல்!'

புதுடெல்லி: வருகிற ஜூலை 9 ஆம் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டும், அதனைத் தொடர்ந்து 11 ஆம் தேதியன்று பொது பட்ஜெட்டும் தாக்கலாகும் என மத்திய அரசு வட்டாரங்களை மேற்கொள் காட்டி டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி, 25 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு, கடந்த மே மாதம் பதவியேற்ற நிலையில், புதிய அரசின் பட்ஜெட் வருகிற ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ரயில்வே பட்ஜெட் தயாரிப்பு பணிகளை ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா மேற்கொண்டுள்ளார்.

மோடி அரசு பதவியேற்றதும் தாக்கலாக உள்ள முதல் பட்ஜெட் என்பதால் சாமான்ய மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்பளதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது சம்பளதாரர்களின் கோரிக்கையாக இருந்தாலும், குறைந்த பட்சம் ரூ. 3 லட்சமாகவாவது உயர்த்தப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

அதே சமயம் ரயில்வே பட்ஜெட்டில் நிச்சயம் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும் என தெரிகிறது. கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா ஏற்கனவே கூறிவிட்டதால்,  பொதுமக்களை கவரும் வகையில் புதிய ரயில்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.