Published:Updated:

பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து கட்சிகள் ஒத்துழைக்க சபாநாயகர் வேண்டுகோள்

பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து கட்சிகள் ஒத்துழைக்க சபாநாயகர் வேண்டுகோள்
பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து கட்சிகள் ஒத்துழைக்க சபாநாயகர் வேண்டுகோள்
பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து கட்சிகள் ஒத்துழைக்க சபாநாயகர் வேண்டுகோள்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்திட அனைத்து கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற திங்கட்கிழமையன்று தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு  வரும் 8 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டையும், வரும் 10 தேதி , பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்நிலையில்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று கூட்டினார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர் , காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் இக்கூட்டத்தொடரில் ரயில் கட்டண உயர்வு, பணவீக்கம் மற்றும் மீனவர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதனால்  இப்பிரச்னைகளை இக்கூட்டத்தொடரில்  எதிர்க்கட்சிகள் நிச்சயம் எழுப்பும் எனத் தெரிகிறது.