Published:Updated:

5 ஆண்டுகளுக்குப் பின் பட்ஜெட்டில் ஒலித்த தமிழ்க் குரல்!

'யானை புகுந்த நிலம்’ என்ற பிசிராந்தையாரின் கூற்றை விளக்கி, நிர்மலா சீதாராமன் பேசினார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( AP )

மக்களவையில் 2019-20 -ம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை, நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்திரா காந்திக்குப் பின்னர் பட்ஜெட்டை தாக்கல்செய்த இரண்டாவது பெண் என்ற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

பட்ஜெட்
பட்ஜெட்

மக்களவைத் தேர்தல் காரணமாக 2019 -20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது முழு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று பட்ஜெட் தாக்கலின்போது, புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். புறநானூற்றிலிருந்து ஓர் அரசன் எப்படி வரி வசூல் செய்ய வேண்டும் என்பதற்கான 'யானை புகுந்த நிலம்’ என்ற பிசிராந்தையாரின் கூற்றை விளக்கி, நிர்மலா சீதாராமன் பேசினார். இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு பட்ஜெட்டின்போது நாடாளுமன்றத்தில் தமிழ்க் குரல் எழுந்துள்ளது.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்

இதற்கு முன்பு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின்போதும் முடிவில் ஒரு திருக்குறள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். 2014-ல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர்...

குறள்:

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்

என்ற குறளை மேற்கொள் காட்டி பேசியிருந்தார்.