Published:Updated:

பட்ஜெட் 2021 வரிச் சலுகை எதிர்பார்ப்புகள்..! முதலீடு முதல் காப்பீடு வரை...

B U D G E T E X P E C T A T I O N S

பிரீமியம் ஸ்டோரி

வரும் 2021-22-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஏராளமான வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

வருமான வரி விலக்கு...

தற்போது அடிப்படை வருமான வரி விலக்கு, 60 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு ரூ.2.5 லட்சமாக உள்ளது. இதை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது ரூ.5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி அளிப்பதன் மூலம் மத்திய அரசு வரிச் சலுகை அளித்து வருகிறது. இதனால், ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே சற்று வரிச் சலுகை கிடைக்கிறது. இதற்கு பதில், வருமான வரி அடிப்படை வரம்பு ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கும் பட்சத்தில் அனைத்து வரிதாரர் களுக்கும் வரி மிச்சமாகும்.

பட்ஜெட்
பட்ஜெட்

வீட்டுக் கடன்: அசல், வட்டிக்குக் கூடுதல் வரிச் சலுகை வேண்டும்!

ரியல் எஸ்டேட் என்னென்ன சலுகைகள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என நவீன்ஸ் ஹவுஸிங் நிர்வாக இயக்குர் ஆர்.குமாரிடம் கேட்டோம். ‘‘தற்போது வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டிக்கு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு என்பது குடியிருக்கும் வீடு மற்றும் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கும் சேர்ந்ததாகும். இதற்கு முன் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டுக்கு கட்டும் வட்டிக்கு முழுவதும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அதேபோல், மீண்டும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், வீட்டுக்கடன் திரும்பக் கட்டும் அசலுக்கு 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. ரூ.1.5 லட்சத்தில் பிராவிடன்ட் ஃபண்ட், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் எனச் சுமார் 15 வகையான முதலீடுகள் மற்றும் செலவுகள் கழிக்கப்பட்டபின் வரிச் சலுகைக்கான தொகை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, திரும்பக் கட்டும் அசலுக்கு தனியே ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படும் பட்சத்தில் பலரும் வீடு வாங்க முன்வருவார்கள். வீட்டுக் கடனுக்கு அளிக்கப்படும் பிரதமரின் வட்டி மானியத் திட்டம் 2021 மார்ச் 31–ம் தேதி முடிவடைகிறது. இதை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். இவை ரியல் எஸ்டேட்துறை மற்றும் வீட்டுக் கடன் துறையின் வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.

ஆர்.குமார்
ஆர்.குமார்

பங்கு முதலீடு: நீண்டகால மூலதன ஆதாயம்

தற்போது நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது. அதன் பிறகு, 10% வரி கட்ட வேண்டும். இந்த 10% வரியை முன்போல் இல்லாமல் செய்தால் இன்னும் அதிகமானவர்கள் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை மேற்கொள் வார்கள் என்பது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் துறைகளைச் சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மத்திய அரசு அதன் நிதித் தேவை களைப் பூர்த்தி செய்ய, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்கு மூலதனத்தைக் குறைத்துக்கொள்வது மூலம் அதிக நிதியைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீண்டகால மூலதன ஆதாய வரியை விலக்கிக் கொள்ளும்பட்சத்தில் அதிக பேர் பங்குகளில் முதலீடு செய்ய வருவார்கள். அரசுக்கும் அது நிர்ணயித்த இலக்கு தொகையைத் திரட்டுவது சுலபமாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடன் மியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டுக்கு வரிச் சலுகை

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் என்.ஜே.பார்ட்னர் ச.ராமலிங்கத்திடம் கேட்டோம். ‘‘ரிஸ்க் குறைவான, அதே நேரத்தில் ஓரளவுக்கு நியாயமான வருமானம் கிடைக்கக்கூடியதாக கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்ய சிறு முதலீட் டாளர்களை ஊக்கப்படுத்த கடன் ஃபண்ட் முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்கலாம்.

நீண்டகாலச் சேமிப்பை வளர்க்கும் விதமாகக் கடன் சந்தை சேமிப்புத் திட்டம் (Debt Linked Savings Scheme - DLSS) என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பெரிய நிறுவனங்கள் கடன் பத்திரச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு திரட்ட இது வழிவகுக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வளம் பெறும்.

ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்க்ஸ் ஸ்கீம் (ELSS) போன்று டி.எல்.எஸ்.எஸ்ஸுக்கும் 80சி-யின்கீழ் ரூ.1,50,000 வரிவிலக்கு கிடைக்க வேண்டும். இந்த முதலீட்டுக்கான லாக் இன் பீரியட் ஐந்து ஆண்டு களாக இருக்கலாம்” என்றார்.

ச.ராமலிங்கம்
ச.ராமலிங்கம்

80டி வரம்பை அதிகரிக்க வேண்டும்!

சமூகப் பாதுகாப்பு இல்லாத இந்தியா போன்ற நாட்டுக்கு அதன் சாதாரண குடிமக்கள் குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், மாதச் சம்பளதாரர்கள் தங்களது காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சமூகப் பாதுகாப்புக்கு இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் ஒரே கருவி காப்பீடு மட்டுமே. இந்தியாவில் காப்பீடு எடுத்திருப்பவர்கள் 3.69% மட்டுமே. கடந்த பல ஆண்டு களில் இந்தியாவின் மருத்துவ வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் மருத்துவக் காப்பீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது சாதாரண மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.

கொரோனா தொற்று காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிப் படைந்துள்ள இந்தத் தருணத்தில் போதிய மருத்துவச் சேவை என்பது கட்டாயம் தேவையாக இருக்கிறது.

80டி பிரிவின் கீழ் 35 வயதுள்ள ஒருவர் மருத்துவக் காப்பீடு ரூ.15 லட்சத்துக்கு (தனக்கு, மனைவி, இரண்டு குழந்தைகள் சேர்த்து) எடுத்தால், ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.28,000 ஆகும். இதில், அவருக்கு ரூ25,000–க்கு வரிச் சலுகை கிடைக்கும். மீதித் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்காது.

80டி-யின் கீழ் வரிச் சலுகைத் தொகையை ரூ.25,000-லிருந்து ரூ40,000-க்கு உயர்த்த வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு இந்த வரம்பை ரூ.50,000–லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் அதிக பேர் போதிய அளவுக்கு ஹெல்த் பாலிசி எடுப்பார்கள். அப்படி நடக்கும்போது கொரோனா வைரஸ் போன்ற பாதிப்பு செலவுகளை சுலபமாகச் சமாளிக்க முடியும்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் சாதாரண நடுத்தர, அரசு ஊழியர், மாதச் சம்பளதாரர்கள் மற்றும் சாமானியனின் வாழ்க்கை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. சரியான மருத்துவக் காப்பீடு இல்லாமல் நிறைய குடும்பங்கள் தங்களது வருமானத்தில் கணிசமான தொகையை மருத்துவச் செலவுக்காக கடந்த 9 மாதங்களில் செலவிட்டுள் ளார்கள்.

காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க மைய அரசின் வரிச் சலுகை சிறந்த ஊக்கத் தைக் கொடுக்கும்.

மேலும், வீட்டுக் கடன் வாங்கும்போது, அதற்கு வீட்டுக் கடன் காப்பீடு எடுப்பது கட்டாயம் எனக் கொண்டு வர வேண்டும். கூடவே, இதற்கு கட்டும் இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு முழு வரி விலக்கு கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், கொரோனா போன்ற பாதிப்புகளால் குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, வீட்டுக் கடன் சுமை குடும்பத்தினர் மேல் வந்து விழாமல் தடுக்க முடியும் என்கிற கோரிக்கையும் பொதுமக்கள் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வைக்கப்படுகிறது!

ஜி.எஸ்.டி வரி நீக்கம்

தற்போது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் மீது 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவிகிதமாகக் குறைத்தால் அல்லது நீக்கினால், காப்பீடு அனைத்து மக்களுக்கும் சென்றடைய வழிவகுக்கும். இந்தக் கோரிக்கையை லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் வைத்திருக்கிறது. அது காப்பீட்டுக்கு செலவு செய்வது சொகுசு செலவு அல்ல. அதற்கு ஏன் 18% வரி என்ற கேள்வியையும் அது எழுப்பியுள்ளது.

பிட்ஸ்

யுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் புதிய நிர்வாக இயக்குநராக சித்தார்த்தா மொகந்தி நியமிக்கப் பட்டிருக்கிறார். 2023 ஜூன் வரை அவர் இந்தப் பதவியில் இருப்பார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு