Published:Updated:

கட்டட அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை... உடனடியாகக் கைகொடுக்குமா..?

கட்டட அனுமதி
பிரீமியம் ஸ்டோரி
கட்டட அனுமதி

தமிழக பட்ஜெட்

கட்டட அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை... உடனடியாகக் கைகொடுக்குமா..?

தமிழக பட்ஜெட்

Published:Updated:
கட்டட அனுமதி
பிரீமியம் ஸ்டோரி
கட்டட அனுமதி

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், பல்வேறு அனுமதி களைப் பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி ‘கவனிக்க வேண்டியதைக் கவனித்தால்’ மட்டுமே அனுமதி கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. அதே போலத்தான் வீடு கட்டுவதாக இருந்தாலும், வீட்டு மனை வாங்குவதாக இருந்தாலும் பல்வேறு அனுமதிகளை அரசிடம் இருந்து பெற வேண்டும். இந்த இடத்தில் கட்டாய கையூட்டு வழங்குவதில் பெரும் சிக்கலை மக்கள் சந்திக் கின்றனர். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற் காக பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவதால் அதிக நேரம் விரையம் ஆகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசாங்கம் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல், மனைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்து வதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்பு களால் ஒருங்கிணைந்த ‘இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை (Single Window System)’ வசதியைத் தொடங்கியிருக்கிறது.

கட்டட அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை... உடனடியாகக் கைகொடுக்குமா..?

இந்த ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8,737.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்பு பகுதிகளில் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு ‘மறுமேம்பாட்டுக் கொள்கையை’ இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை 60 திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

இது குறித்து கட்டுமானத்துறை நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

“தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் ‘இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை’ அறிவிப்பானது புதியது கிடையாது. காலம் காலமாகச் சொல்லப்படும் அறிவிப்புதான். ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு மட்டுமே இருக்காமல், இந்த அறிவிப்பை தற்போதைய தமிழக அரசு உடனடியாக நடைமுறைபடுத்தினால், அது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இத்துறை சார்ந்த நடவடிக்கை களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய நிலையில், சிறிய வீடு அல்லது தனி வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னைகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் கமர்ஷியல் கட்டடங்கள் மற்றும் பெரிய பெரிய அப்பார்ட்மென்டுகளைக் கட்டுபவர்களுக்கு அரசு அனுமதிகளைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. தற்போதைய நிலையில் அரசு அனுமதியைப் பெறுவதற்கு முன்பாக கட்டடத் தூண்கள், தளம் அமைப்பது போன்ற விஷயங்களுக்காக வாங்கப்படும் ஸ்டக்ச்சரல் கன்சல்டன்ட் சான்றிதழ், லீகல் ஓப்பீனியன், சாயில் டெஸ்ட் என இப்படி பல அனுமதிகளைப் பெற்ற பின்னரே அரசு அலுவலகத்தை நாட முடியும். இப்படியான சூழ்நிலையில் சி.எம்.டி.ஏ மற்றும் வருவாய் துறை என பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒற்றை சாளர முறையின் மூலம் அரசின் அனுமதி சார்ந்த அனைத்தும், ஒரே குடையின் கீழ் வந்துவிட்டால் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது.

இன்றைய நிலையில் இ.சி மட்டும்தான் உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் அப்டேட் ஆகிறது. பல ஆவணங்கள் டிஜிட்டலில் அப்டேட் செய்யப்படாமல் இருக்கின்றன. இனி எல்லாமே டிஜிட்டல்மயம் என்று ஆன பிறகு, கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சொத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது, ஒரே நேரத்தில் வரவு மற்றும் பிடித்தம் ஆகிய செயல்பாடுகள் நடப்பதுபோல, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு சொத்து கைமாறும்போது மின்சாரம், கார்ப்பரேஷன், பட்டா, சிட்டா உள்ளிட்ட அந்த சொத்து சார்ந்த அனைத்து ஆவணங் களிலும் பெயர் மாற்றமடைய வேண்டும். அதற்கு அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக டிஜிட்டல்மயம் ஆக வேண்டும்” என்றார் தெளிவாக.