Published:Updated:

ஒன் பை டூ: ‘தமிழக அரசின் பட்ஜெட்?’

ஒன் பை டூ
பிரீமியம் ஸ்டோரி
ஒன் பை டூ

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தின்மூலம், ஆண்டுக்கு ஆறு லட்சம் பெண் குழந்தைகள் பயனடைவார்கள்.

ஒன் பை டூ: ‘தமிழக அரசின் பட்ஜெட்?’

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தின்மூலம், ஆண்டுக்கு ஆறு லட்சம் பெண் குழந்தைகள் பயனடைவார்கள்.

Published:Updated:
ஒன் பை டூ
பிரீமியம் ஸ்டோரி
ஒன் பை டூ

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க.

`டிஜிட்டல் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போலத்தான் தமிழக அரசின் பட்ஜெட் உள்ளது! தி.மு.க-வின் ஆடம்பரத் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல இந்தப் பளபளக்கும் பட்ஜெட்டையும் அவர்களால் நிறைவேற்றவே முடியாது. பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியின் கடன்சுமை 3.6 லட்சம் கோடிதான். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த முதல் நிதியாண்டே 1.1 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அடுத்த 2022-23 ஆண்டுக்கு 1.2 லட்சம் கோடி கடன் வாங்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். 2 ஆண்டுகளிலேயே 2.3 லட்சம் கோடி கடன் வாங்கி, ஒரு பொருளாதாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்றுகூடத் தெரியாமல், நிர்வாகத் திறமையற்ற ஆட்சியைத்தான் இவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நகைக்கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்றார்கள் ஆனால் செய்யவில்லை. பெட்ரோல், டீசல், காஸ் விலைக்குறைப்பு இல்லை; மாணவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி இல்லை; மகளிருக்கு மாதாந்தர ஊக்கத்தொகை 1,000 என்றார்கள், அதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஆனால், ஏழை, எளிய பெண்களின் திருமண உதவிக்காக அம்மா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தையும் நீக்கிவிட்டு, தற்போது பள்ளிக்கல்வி முடித்த மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என்றிருக்கிறார்கள். இதையும் அவர்களால் செய்ய முடியாது. கேள்வி கேட்டால், ‘கொடுக்கிறோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம், யார் யாருக்கு, என்ன தேதியில் கொடுக்கிறோம் என்றா சொல்லியிருக்கிறோம்?’ என பட்ஜெட் அறிவித்த பி.டி.ஆர்-கூட லாஜிக் பேசுவார். ஆக, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைப்போலவே எதற்கும் உதவாத வாய்ஜாலம்தான் இந்த பட்ஜெட். நடைமுறைச் சாத்தியமற்ற, மக்களை ஏமாற்றக்கூடியதுதான் இந்த பட்ஜெட்!

பாபு முருகவேல்
பாபு முருகவேல்
சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

சிவ ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும், மக்களுக்கு அளித்த வாக்குறுதி களை முறையாக நிறை வேற்றாத வர்கள்தான், ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் கூட முழுமையடையாத எங்கள் ஆட்சியைப் பார்த்துக் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தின்மூலம், ஆண்டுக்கு ஆறு லட்சம் பெண் குழந்தைகள் பயனடைவார்கள். அதேபோல, அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த புதிதாக 18,000 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத, கல்விப் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டம். இவற்றையெல்லாம் வரவேற்பதற்கு மனமில்லாத இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.திமு.க-வினர் வயிற்றெரிச்சலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மக்களைச் சென்றுசேர்வதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள், ஊழல் முறைகேடுகள் உள்ளன. அதனால்தான், அந்தத் திட்டத்தை மாற்றி, மேம்படுத்தி கல்வியில் பெண்கள் இடைநிற்றலைக் குறைக்கும்விதமாக, படிக்கும்போதே பெண்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே, உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் 1,000 திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். அதேபோல, குடும்பப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு, தகுதிவாய்ந்த பயனாளி களைக் கண்டறியும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வதற்கான அறிவிப்பும் வரக்கூடிய மானியக் கோரிக்கை விவாதக் கூட்டத்தில் வெளியாகும் வாய்ப்பிருக்கிறது. நிதி நிலை சீரடைந்த பின்னர் நிச்சயமாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படும். ஏழாண்டு களுக்குப் பிறகு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ள முதல் பட்ஜெட் இது. எங்கள் முதல்வர் சொல்லியிருப்பதைப்போல தமிழக வரலாற்றிலேயே மிகவும் சிறப்புவாய்ந்த பட்ஜெட் இதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism