வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலானவுடனேயே அது குறித்து நிபுணர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். அந்தக் கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்தினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். அதில் நிபுணர்கள் பகிர்ந்துகொண்டவை இங்கே...

வருமான வரி... ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை!

நிதி ஆலோசகரும் மை அஸெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநருமான சுரேஷ் பார்த்தசாரதி பேசும்போது, “தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வாய்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த வருமான வரி வரம்புகளின்படி, அவற்றுக்கான வரிச் சலுகைகள், வரிக் கழிவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்தலாம். இரண்டாவது, தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி வரம்புகளின்படி வரி செலுத்தலாம். ஆனால், தற்போது குறைக்கப்பட்டிருக்கும் வருமான வரி வரம்புகளின்படி வரி செலுத்தினால், அதற்கு வரிச் சலுகை, வரிக் கழிவு எதுவும் கிடையாது. எனவே, இரண்டையும் கணக்கீடு செய்து பார்த்து, எது அதிக பயனுள்ளதாக இருக்கிறதோ அதைத் தேர்வுசெய்யலாம்.

வருமான வரிக்கான வரிச் சலுகைகளை எவ்வளவு பேர் முறையாக அனுபவிக்கிறார்கள் என்பதே ஒரு கேள்விக்குறிதான். தற்போதுள்ள மத்திய அரசு நீண்டகால நோக்கில் மேலைநாடுகளில் இருப்பதுபோல, ‘வருமானத்துக்கு வரிக் கழிவும் கிடையாது, வரிச் சலுகைகளும் கிடையாது’ என்று அறிவிக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. அதற்கான ஒரு உதாரணம்தான் இது.

ஒரு நாடு வளர வேண்டுமென்றால் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வரிவிதிப்பு முறை, சேமிப்பை ஊக்கப்படுத்துவதாக இல்லை. சேமிப்புகளுக்கு வரிச் சலுகைகள் அளிக்கும்பட்சத்தில் அதற்காகவாவது சேமிப்பின் மீதும், முதலீட்டின் மீதும் ஆர்வம் ஏற்படும். தற்போது அதற்கான ஊக்குவிப்பு இல்லை.

`நாடுவிட்டு நாடு பயணித்து வருமானம் சம்பாதிக்கும் இந்தியர்கள், அந்த நாடுகளில் வரி செலுத்துபவர்களாக இல்லாத பட்சத்தில், அவர்களுடைய உலகளாவிய வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும்’ என்று இருக்கிறது. இதில் என்ன சிக்கலென்றால், வருமான வரியே இல்லாத சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இவர்கள் ஈட்டும் வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் அரசின் முயற்சியைப் பாராட்டலாம்’’ என்றார்.

தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வரிவிதிப்பு முறை, சேமிப்பை ஊக்கப் படுத்துவதாக இல்லை.

தனியார்மயத்தை நோக்கி..!

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோ “அனைத்தையும் தனியார்மயமாக்குவதை நோக்கியே இந்த அரசின் சிந்தனை இருக்கிறது. ஐ.டி.பி.ஐ வங்கி, தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க உருவாக்கப்பட்டது. அதைச் சாதாரண வணிக வங்கியாக மாற்றியதே தவறு. அதன் மேல்மட்ட நிர்வாகக்குழு திறம்படச் செயல்படாததால்தான் அந்த வங்கி நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. தற்போது அதை முழுமையாகவே தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது தவறான முடிவு.

அதுமட்டுமல்ல, நல்ல நிலையில் இயங்கிவரும் எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதற்காக ஐ.பி.ஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். வங்கிகளைப் போல, இன்ஷூரன்ஸ்துறை சார்ந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது சிக்கலான முடிவு. எல்.ஐ.சி-யின் க்ளெய்ம் விகிதம் தனியார் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தைவிட அதிகம். தனியாருக்கு மாற்றப்பட்டால் வாடிக்கையாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் தானாக முன்வந்து க்ளெய்ம் செட்டில்மென்ட் தந்தது. இது போன்ற சூழல்களில்தான் அரசு நிறுவனங்களின் தேவை புரியும். அதேபோல கல்வித் துறையிலும் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள் வந்துள்ளன. கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அனைத்தையும் இலவசமாகச் செய்து தர வேண்டும்.’’ என்றார்.

விவசாயம், ஏற்றுமதி சிறப்பு!

ஏற்றுமதியாளரும் புளூபாரத் எக்ஸிம் பி.லிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான கே.எஸ்.கமாலுதீன் ‘‘சில வாரங்களுக்கு முன்னர் ‘பசுமை விகடன்’ சார்பில் நிதியமைச்சரைச் சந்தித்து, விவசாய மேம்பாட்டுக்குத் தேவையான பரிந்துரைகளைத் தந்தோம். பசுமை விகடன் சமர்ப்பித்த பரிந்துரையிலிருந்து, இரண்டு விஷயங்களை நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். விவசாய விளைபொருள்களுக்கான சேமிக்கும் கிடங்குகள் அமைத்தல் மற்றும் மாவட்டம்தோறும் விவசாயம் மற்றும் இதர பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ‘ஏற்றுமதியாளர்கள் ஹப்’ அமைத்தல். இந்த இரண்டு அறிவிப்புகளுமே விவசாயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மூன்றாவதாக, `குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வேண்டும்’ என நான் நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வந்திருக்கிறது.

பால் உற்பத்தி நம் நாட்டில் ஏற்கெனவே அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பரிசோதித்து ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் இங்கு குறைவு. இதனால் மற்ற நாடுகள் நம்மிடம் பால் மற்றும் பால் பொருள்கள் வாங்க பயப்படுகிறார்கள். இந்த பட்ஜெட்டில் பால் பரிசோதனைக்கூடங்கள் அமைக்கும் விஷயத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

கிராமப்புறங்களிலுள்ள பெண்களின் வளர்ச்சிக்காக ‘தான்யலட்சுமி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். `அவர்கள் விதைகளைச் சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் ஈருபடுவார்கள்’ எனச் சொல்லியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. பால், பழங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லத் தனி ரயில்கள் இயக்கப்படும்; ‘கிருஷி உடான்’ என்ற புதிய திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்; விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்; சோலார் பம்புசெட்டுகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்குக் கடனுதவி போன்ற பல திட்டங்களை வரவேற்கலாம்.

சிறு ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ‘நிர்விக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றப்பட்டால், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பில் 90% இழப்பீடு கிடைக்கும். இதுவரை 60% இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது” என்றார்.

முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

பங்குச் சந்தை நிபுணரும், ஓரியன்டல் ஸ்டாக்ஸ் உரிமையாளருமான வ.நாகப்பன் சொன்னது...

“பட்ஜெட் அறிவிக்கப்பட்ட தினத்தில், சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சற்று நேரத்தில் ஏற ஆரம்பித்தன. ஆனால், தடாலென 500 புள்ளிகளைத் தாண்டி இறக்கத்தைச் சந்தித்தது சென்செக்ஸ். நிஃப்டி 200 புள்ளிகள் வரை இறங்கியது. வர்த்தகம் முடியும்போது சென்செக்ஸ் 987 புள்ளிகள் தாண்டிய இறக்கத்தையும், நிஃப்டி 300 புள்ளிகள் தாண்டிய இறக்கத்தையும் பதிவுசெய்தன.

குறிப்பாக, வங்கி மற்றும் இன்ஷூரன்ஸ் துறை சார்ந்த பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐ.டிசி பங்கு பெரும் சரிவை எதிர்கொண்டது. இந்த இறக்கம் தற்காலிகமானதுதான். இதற்கும் பட்ஜெட் அறிவிப்புக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் முதலீட்டாளர்கள் இந்தச் சூழ்நிலையை எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வது நல்லது.

எல்.ஐ.சி நிறுவனத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான பங்குகளில் ஒரு பகுதி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் பங்குச் சந்தையில் விற்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம் என்பதால், இந்தப் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் வரவேற்பு இருக்கும். `கடன் பத்திரங்கள் மூலம் அரசுக்கு நிதி திரட்டப்படும்’ என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சங்களுள் ஒன்று” என்றார்.

உள்ளீட்டு வரிக்கழிப்பு முறையை மீண்டும் கொண்டுவரவில்லையே!

இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களைப் பேசிய ‘நவீன்ஸ்’ ஆர்.குமார், ‘‘எதை நோக்கிப்போகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இந்த பட்ஜெட் இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. உள்ளீட்டு வரிக்கழிப்பு முறையை மீண்டும் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை. வாங்கத்தக்க விலையிலான வீடுகளுக்கு செலுத்தப்படும் வங்கிக் கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்திருப்பது நல்ல விஷயம்.

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப்படி நகர்ப் பகுதிகளில் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் மானியம் போதுமானதாக இல்லை. சொந்த வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வருமான வரிச் சலுகையும் போதுமானதாக இல்லை. அவற்றை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் சொந்த வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகை வீட்டில் வசிப்பதையே விரும்பும் சூழல் ஏற்படும். பொருளாதார மந்தநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. இதனால் 40% பேருக்குமேல் வேலையிழப்பைச் சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் ரியல் எஸ்டேட்துறை மீண்டெழுவது முக்கியம். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதற்கான முன்னெடுப்பு எதுவுமே தெரியவில்லை” என்றார்.