Published:Updated:

பட்ஜெட் 2020: அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பலன் உண்டா?

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன்

எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சகம், இந்த பட்ஜெட்டில் 12,000 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 7,572 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களில் சுமார் 78,000 ஊழியர்களை வழியனுப்பிவைத்த கையுடன், 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. அதிலும் தனியார்மயத் திட்டங்களுக்குப் பஞ்சமில்லை. இந்த பட்ஜெட்டால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்குச் சாதகமா பாதகமா?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) மிகவும் நல்ல நிலையில் இயங்கிவருகிறது. அந்த நிறுவனத்தில் அரசின்வசமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை ஐ.பி.ஓ வெளியீட்டில் விற்கும் மத்திய அரசின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எல்.ஐ.சி-யின் பங்குகளை தனியாருக்குக் கைமாற்றும் நடவடிக்கை, அடித்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தின் ஆயுள் காப்பீடு, சேமிப்பு மற்றும் முதலீட்டுக் கனவைப் பெரிதும் பாதிக்கும் என்ற அச்சமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது, ‘உங்களுக்கு வரிச்சலுகை, வரிக்கழிவுகள் வேண்டும் என்றால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த வரம்புகளில் வரி செலுத்தலாம். வேண்டாம் என்றால், வரிவிகிதங்களைச் சற்றுக் குறைத்து தற்போதைய பட்ஜெட்டில் அறிவித்துள்ள வரிவரம்புகளைப் பயன்படுத்தலாம்’ என்று ‘இரண்டு விரலில் ஒன்றைத் தொடு’ என்பதுபோல் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் மாதச் சம்பளக்காரர்களின் வருமான வரிச்சலுகை மற்றும் வரிக்கழிவுகளிலும் கைவைத்துள்ளனர்.

சிவகுமார் - குமார்
சிவகுமார் - குமார்

இதுகுறித்து தொழில்முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமாரிடம் பேசினோம். ‘‘எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சகம், இந்த பட்ஜெட்டில் 12,000 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 7,572 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் கொடுத்துள்ளனர். இது குறைவான நிதி. எம்.எஸ்.எம்.இ துறையில் ஆடிட் செய்யக்கூடிய உச்சவரம்பை ஒரு கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இதற்கான நிபந்தனையாக பத்து சதவிகிதத்துக்குமேல் ரொக்கப் பணத்துக்கு விற்பனை செய்திருக்கக் கூடாது என்கின்றனர். ஆனால், எம்.எஸ்.எம்.இ துறையில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கமாகவே நடைபெறுகின்றன. எனவே, சலுகை அறிவித்தும் அதற்கான பலனை அந்தத் துறையினரால் பயன்படுத்த முடியாத நிலைதான் ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்திய மக்களுக்குத் தேவையான சமையல் எண்ணெய் 60 சதவிகிதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் தேவையும் விலையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே, எண்ணெய்வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், அதுகுறித்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இறக்குமதி செய்வதற் கான வரியையும் குறைக்கவில்லை. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியது.

வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி-யைக் குறைக்க வேண்டும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. ஜி.எஸ்.டி குறைத்தால்தான் சாமானிய மக்களால் வாகனங்கள் வாங்க இயலும்’’ என்றார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ரியல் எஸ்டேட் துறையில் பல்லாண்டுகாலம் அனுபவமிக்க ‘நவீன்ஸ் ஹவுஸிங்’ நிர்வாக இயக்குநர் ஆர்.குமார், ‘‘இந்தியாவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு, கட்டுமானத் துறை வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது. அதில் பெரும்பாலானவர்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் மட்டும் சுமார் 40 சதவிகிதம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலையில் வெளியாகியிருக்கும் பட்ஜெட்டில், வீட்டுக்கடன் வட்டிக்கு வழங்கப்படும் வருமான வரிக்கழிவு இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்த்தோம். அப்படி உயர்த்தப்பட்டால், நிறையபேர் வீடு வாங்குவதற்கு முன்வருவார்கள் என்று கணித்திருந்தோம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்யவில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வை எப்படிச் சரிசெய்யப்போகிறோம் என்பது கேள்விக்குறியே’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதார மந்த நிலையைப் போக்குவது குறித்து எந்தவிதமான திட்டமிடலும் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. வங்கி வைப்புத்தொகைக்கான அதிகபட்ச காப்பீட்டுத்தொகையை ஐந்து லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், இதற்கு பட்ஜெட் உரையில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது வங்கிகள் திவாலாகக்கூடுமோ என்ற அச்சத்தையே அதிகப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட திட்டங்களில் மிகுதியான தனியார் பங்களிப்பு இருந்ததும், மானியங்கள், வரிச்சலுகைகள், வரிக்கழிவுகள் ஆகியவை நீக்கப்பட்டதும் சாமானிய மக்களை ஈர்க்கவில்லை!