Published:Updated:

பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நான்கு விஷயங்கள்!

budget 2020
budget 2020

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM) சார்பாகச் சென்னை வந்திருந்த இதன் தலைமை இயக்குநர் ராஜேஷ் மேனனைச் சந்தித்தோம்.

வரும் 2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், நாளை (பிப்ரவரி 1-ம் தேதி) தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியை 2018-19-ம் நிதி ஆண்டில் சந்தித்தது. பாசஞ்சர் கார் உட்பட சில செக்மென்ட்கள் தேறினாலும், டூ வீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை இன்னும் வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. ஆட்டோமொபைல் சந்தை முன்னேறவில்லை என்றால் இதை அடிப்படையாக வைத்து இயங்கும் சுமார் 3.7 கோடி பேர் வாழ்க்கையில் பெரும் சிக்கல் ஏற்படும்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM) சார்பாகச் சென்னை வந்திருந்த இதன் தலைமை இயக்குநர் ராஜேஷ் மேனனைச் சந்தித்தோம். `தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன?' என்று விசாரித்தபோது, இந்திய அரசிடம் இருந்து 4 விஷயங்களை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

ஸ்கிரேப்பேஜ்

ஸ்கிரேப்பேஜ் பாலிசியை அரசு அமல்படுத்தப்போவது கட்டாயம். ஆனால், மக்கள் இந்தத் திட்டத்தை வேகமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்குச் சலுகைகளைக் கொடுக்க வேண்டும். ஸ்கிரேப்பேஜ் பாலிசியைப் பயன்படுத்துபவர்களுக்கு ஈர்க்கக்கூடிய சலுகைகள் தேவை. இதைப் பட்ஜெட்டில் அறிவித்தால் சிறப்பாக இருக்கும்.

budget 2020
budget 2020
கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020

ஜிஎஸ்டி

தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்ததால் வாகனங்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இது, வாகனம் வாங்க விரும்புபவர்களின் சென்ட்டிமென்ட்டைப் பாதித்திருக்கிறது. இதனால், கார் மற்றும் பைக் மட்டுமல்ல, கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையும் சரிந்துள்ளது. இதனால் டெப்ரிசியேஷன் மதிப்பு 25 சதவிகிதம் என்பதை நிரந்தரமாக்க வேண்டும், வாகனப் பதிவு விலை உயர்வைப் பின்வாங்கிக்கொள்ள வேண்டும், ஹைப்ரிட்/CNG/LPG/எத்தனால்/மெத்தனால் வாகனம் வாங்குபவர்களுக்கு வருமான வரிச் சலுகை தர வேண்டும். சில குறிப்பிட்ட செக்மென்ட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் வாகனத்தின் ஓனர்ஷிப் காஸ்ட் குறையும். மக்கள் வாகனங்கள் வாங்கத் தொடங்குவார்கள்.

budget 2020
budget 2020

பஸ் போக்குவரத்து

போக்குவரத்து நிதியின் பற்றாக்குறையால் மாநில போக்குவரத்துக் கழகங்கள் பஸ் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளார்கள். போக்குவரத்துச் சலுகைகள், நிதி போன்றவற்றின் மூலம் மாநில போக்குவரத்துக் கழகங்களை பஸ்கள் வாங்க வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை

ஒரு IC இன்ஜின் காரைவிட எலெக்ட்ரிக் கார்களின் விலை தற்போது இரண்டு மடங்காக இருக்கிறது. இதைக் குறைக்க வேண்டும் என்றால் பேட்டரிக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும். லித்தியம் அயன் பேட்டரி செல்களை இறக்குமதி செய்ய அரசு 5 சதவிகித கஸ்டம்ஸ் டியூட்டி பெறுகிறது. வரும் பட்ஜெட்டில் 3 ஆண்டுகளுக்கு 0 சதவிகித கஸ்டம்ஸ் டியூட்டி தந்தால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும்; விற்பனையும் அதிகரிக்கும்.

பின் செல்ல