Published:Updated:

`மத்திய பட்ஜெட் 2020-21' - ரயில்வே துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? #Budget2020

budget 2020
budget 2020

ஆங்கிலேயரின் காலத்திலிருந்தே தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், 2017-ல் மத்திய பட்ஜெட்டோடு ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ரயில்வே துறைக்காக மெகா திட்டங்களை அறிவித்துள்ளவற்றைப் பார்ப்போம்.

`கடந்த சில காலாண்டுகளாக இந்திய ரயில்வே, சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்தைவிடக் குறைந்த அளவிலேயே பயணிகள் வருகின்றனர். இதனால், வருவாய் பெருமளவில் குறைந்தது. இந்நிலையை மாற்றி, பயணிகளுக்குச் சிறப்பான சேவையை வழங்க அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

Railway
Railway

சிறப்பான சேவை, ரயில்களின் தூய்மையை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட டிக்கெட் விநியோகம், வசதியான பயணம் மற்றும் தடையற்ற இணைப்பை வழங்கும் நோக்கத்தோடு ரயில்வே அமைச்சகம் செயல்படும். இந்நோக்கத்தை நிறைவேற்ற அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும்.

#LiveUpdates: ``தனிநபர் வருமான வரி விகிதம் குறைப்பு!'' - மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #Budget2020

பிரதமர் மோடி அரசாங்கத்தின் 5 ட்ரில்லியன் பொருளாதாரக் கனவை நிறைவேற்ற ரயில்வே துறையும் பெரும்பங்காற்றும். ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையை வழங்கியுள்ளது. பியூஷ் கோயலின் ரயில்வே அமைச்சரவையின்கீழ் ரயில் விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளன. ஆளில்லா லெவல் கிராசிங்குகள் பெருமளவில் அகற்றப்பட்டுள்ளன.

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். டெல்லி - மும்பை அதிவேக ரயில் சேவை திட்டம் 2023-க்குள் முடிக்கப்படும்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

சுமார் 550 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்படும். ரயில் தடங்களில் சூரிய மின்நிலையங்கள் அமைக்கப்படும். விவசாய உற்பத்திகள் சந்தைக்குச் செல்ல `கிசான் ரயில் திட்டம்’ அமல்படுத்தப்படும். இது அரசு - தனியார் கூட்டுத்திட்டமாகும். பெங்களூர் புறநகர் ரயில் சேவையும் மெட்ரோ மாதிரியில் அரசு தனியார் கூட்டுத் திட்டமாக மாற்றப்படும்.

பட்ஜெட் 2020: நிதி அமைச்சரைத் தேடிவந்த 19,000 பரிந்துரைகள்! #Budget2020 #VikatanPhotoCards

அரசு - தனியார் கூட்டுத்திட்டத்தின் கீழ், சுமார் 1,150 தனியார் ரயில்கள் இயக்கப்படும். முக்கியச் சுற்றுலா வழித்தடங்களில் தேஜஸ் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இவை சதாப்தி ஏசி ரயில்களைவிட வசதி மிகுந்ததாக இருக்கும்.

தற்போது இயக்கப்பட்டுவரும் இரண்டு தேஜஸ் விரைவு ரயில்கள் ஐஆர்சிடிசி நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 லட்ச ரூபாய்வரை இலவச காப்பீடும் வழங்கப்படுகிறது. சிசிடிவி, வெண்டிங் இயந்திரம், பயோ கழிவறைகள், எல்இடி திரைகள் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.

விரைவில் நாக்பூர், சபர்மதி, அமிர்தசரஸ் மற்றும் குவாலியர் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றப்படும். அதன் மறுவடிவமைப்புப் பணிகளை இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு, அவற்றை விமான நிலையம் போன்ற மையங்களாக மாற்றும்.

railway
railway
pixabay

பயணிகளுக்குப் பாதுகாப்பான சேவையை வழங்க, ரயில் சக்கரங்கள், கோச்சுகள், லோகோமோடிவ் உள்ளிட்டவற்றிலுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்படும்.

மாதிரி ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அனைவருக்கும் வீடு திட்டம், நீர்ப்பாசன திட்டம் போன்றவற்றுக்காக பட்ஜெட்டில் சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு