Published:Updated:

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

பட்ஜெட் ஃபாலோஅப்

பிரீமியம் ஸ்டோரி

சீனாவிற்கு அடுத்து தங்கத்துக்கு அதிக அளவு நுகர்வோர் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில், இந்திய நுகர்வோர் இன்னும் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க நேரிடுமோ என்கிற கலக்கம், பட்ஜெட்டுக்குப்பிறகு ஏற்பட்டுள்ளது. காரணம், 2013-ம் ஆண்டிற்குப்பிறகு சென்ற வெள்ளியன்று தங்க இறக்குமதிக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

கடந்த 5-ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை தற்போதைய 10 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளார். நம் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உள்நாட்டில், இந்தத் துறை சார்ந்த வர்த்தகர் களுக்குத் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதால், விற்பனை செய்யப்படும் ஆபரணங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விற்பனை சற்றுக் குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்த கற்கள்/ தங்க ஆபரணங்கள் ஏற்றுமதியில் சர்வதேசப் சந்தைப் போட்டியில் நமக்கான வாய்ப்பு குறையலாம்.

இந்த வரியைக் குறைக்கவேண்டும் என அரசிடம் வர்த்தகர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

தங்க முதலீடு - அரசுக்கு சுமைதான்

தங்கத்தின்மீது மக்களுக்கு அளவு கடந்த மோகம் இருந்தாலும், மத்திய அரசைப் பொறுத்தவரை இது ஒரு பெரும் சுமையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், தங்க இறக்குமதிக்காகப் பெருமளவு அந்நியச் செலாவணியைச் செலவழிப்பது மற்றும் பொருளாதாரத்திற்கு எந்த வகையிலும் பயன் படாமல் முடக்கி வைப்பது போன்ற காரணங் களால் இதில் அவ்வப்போது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

தங்க இறக்குமதி

இந்தியாவின் தங்க இறக்குமதி 2015-16-ல் 968 மெட்ரிக் டன்னாகவும், 2016-17-ல் 778 மெட்ரிக் டன்னாகவும், 2017-18-ல் 955 மெட்ரிக் டன்னாகவும் இருந்துள்ளது. 2018-19-ல் 982 மெட்ரிக் டன்னாகக் காணப்படுகிறது.

இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், 2015-16-ம் நிதியாண்டில் 31.8 பில்லியன் டாலராக இருந்தது, 2016-17–ம் நிதியாண்டில் 13% குறைந்து அதாவது, 27.5 பில்லியன் டாலராகக் காணப்பட்டது. ஆனால், 2017-18-ம் நிதியாண்டில் 22% வரை அதிகரித்து அதாவது, 33.7 பில்லியன் டாலராகக் காணப்பட்டது.

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

2018-19-ல் இதற்கு முந்திய ஆண்டைவிட 3% மட்டுமே குறைந்து அதாவது, 32.8 பில்லியன் டாலராகக் காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்க இறக்குமதியைக் குறைக்கவேண்டும் என்ற முனைப்பை மத்திய அரசு இந்த பட்ஜெட்டின் வாயிலாக உணர்த்தியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகிற, ஒரு சந்தைப் பொருளாகத் தங்கம் இருக்கிற காரணத்தால், இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமீபத்திய சர்வதேச விலையேற்றம் மற்றும் தற்போதைய இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, 2019-ல் 10% குறைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேவை அதிகரிப்பு

உலக தங்க குழுமம் (World Gold Council)இந்தியாவில் வரும் 2025–ம் ஆண்டுவாக்கில் 547 மில்லியன் என்ற அளவிற்கு உழைக்கும் திறன் கொண்ட, அதேசமயம் நடுத்தர மக்களாக இருக்கக்கூடும் எனக் கணக்கிட்டுள்ளது. இந்த நடுத்தர மக்களின் வருவாயில் ஒருபகுதி தங்கத்தில் முதலீடாக இருக்கும்பட்சத்தில், தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

உலக தங்கக் குழுமத்தின் அறிக்கையின்படி, இந்தியாவைப் பொறுத்தவரை, 1990 முதல் 2015 வரையிலான காலத்தில் நுகர்வோரின் தங்க ஆபரணங்கள், தங்கக் காசுகள் மற்றும் தங்கக் கட்டிகள் போன்றவற்றின் மீதான முதலீடுகள் இரண்டு காரணங்களின் அடிப்படை யில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது.

ஒன்று, தனிநபர் வருமானம் உயரும்போது முதலீடு அதிகரிப்பதாகக் கூறியுள்ளது. அதாவது, தனிநபர் வருமானம் 1% அதிகரிக்கும்போது, தங்கத்தின் தேவையும் 1 சதவிகிதமாக உயர்கிறது. இரண்டாவதாக, தங்கத்தின் விலை என்பது, தங்கத்தின் மீதான முதலீட்டைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கிறது. அதாவது, 1% விலை அதிகரித்தால், தங்கத்தின் தேவையில் 0.5% குறைவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இப்போதைய சூழ்நிலையில், தேவையின் காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால், சர்வதேச விலை நிச்சயம் இந்திய விலையில் பிரதிபலிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

எதிர்கால விலை எப்படி இருக்கும்?

இப்போதைய நடவடிக்கையானது, அரசு எதிர்பார்க்கிற நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்குத் தங்கம் இறக்குமதி அதிகரிப்பது ஓர் இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதை உணர்த்துகிறது. சென்ற வருடம், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் இறக்கம் ரூ.74 வரை சென்றதையடுத்து, நம் உள்நாட்டில் விலையேற்றம் காணப்பட்டது. இப்போது டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து ரூ.69-ஆகக் காணப்படுகிறது. ஆனால், தற்போது சர்வதேச விலை அதிகரித்து உள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோதிலும், உள்நாட்டில் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது.

தற்போதைய இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் அல்லது விலை அதிகரிக்கா விட்டாலும், விலைச்சரிவு தடுக்கப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு