Published:Updated:

பட்ஜெட் சந்தைக்கு சாதகமா..?

பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட்

ஷேருச்சாமி ஆரூடம்

பட்ஜெட் சந்தைக்கு சாதகமா..?

ஷேருச்சாமி ஆரூடம்

Published:Updated:
பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட்

‘ஷேருச்சாமியைச் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது’ என்ற நினைப்பு பட்ஜெட் வாசித்து முடித்தவுடன் ஏற்பட்டது. உடனே போனைப் போட்டு அப்பாயின்ட்மென்ட் கேட்டால், ‘‘7-ம் தேதி காலை 11 மணிக்கு வரவும்’’ என்ற தகவலை அவருடைய பி.ஏ சொன்னார். அறிவும் (அறிவழகன்) நானும் (செல்வம்) சரியாக 11 மணிக்குச் சென்று அவரைச் சந்தித்தோம்.

share market
share market

பரஸ்பர நல விசாரிப்புக்குப் பிறகு ‘‘என்ன திடீர்னு என் ஞாபகம் வந்திருக்கு...’’ என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார் ஷேருச்சாமி. நாங்களும் பதிலுக்கு சிரித்தோம். ‘‘2017-ம் வருஷம் நவம்பர்ல சந்திச்சோம். அதுக்கப்புறம் மார்ச்-2018 (நிப்ஃடி 10000 லெவல்), அக்டோபர்-2018 (நிஃப்டி 10000 லெவல்), ஆகஸ்ட்-2019 (நிப்ஃடி 10650 லெவல்), அக்டோபர்-2019னு (நிஃப்டி 11100 லெவல்) சந்தை இறங்குறப்பல்லாம் உங்களை எதிர்பார்த்தேன். நீங்க வரலை. சரி, பல்க்கா சம்பாதிச்சுட்டீங்கபோலருக்குனு நினைச்சுக்கிட்டு நானும் அமைதியா இருந்துட்டேன்’’ என்றார் தன்னுடைய டிரேட் மார்க் வெடிச் சிரிப்புடன்.

‘‘சாமி கடைசியா சந்திச்சப்போ நீங்க, `உலகத்துல இருக்குற நாடுகளிலேயே நம்ம நாட்டை சிறந்த முதலீட்டு வாய்ப்பாக எல்லாரும் நினைக்குறாங்க’னு சொன்னீங்க. அதுக்கப்புறம் நிஃப்டி 2,400 பாயின்ட் வரைக்கும் ஏறியிருக்கு. அதனால கொஞ்சம் கையில காசு தாராளமாகப் புரளுது சாமி’’ என்றேன்.

‘‘அறிவு உன் நிலைமை எப்படி?’’ என்று சாமி கேட்க, ‘‘உங்க ஆசீர்வாதம் சாமி. வருஷத்துக்கு 20% லாபம் கிடைக்குது’’ என்றான் அறிவு.

‘‘சரி, சரி. ரெண்டு பேரும் இதை அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. இப்போ என்ன வேணும் சொல்லுங்க...’’ என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் ஷேருச்சாமி.

‘‘சாமி, இப்போ வந்திருக்கிற பட்ஜெட்னால சந்தை எப்படி இருக்கும்னு கேட்டுட்டுப் போக வந்தோம்’’ என்றேன் நான்.

தனது ஐபேடை கையில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் ஷேருச்சாமி. ‘‘நான் எதிர்பார்த்த மாதிரிதான் பட்ஜெட் வந்திருக்கு. பெருசா தொழில் ஊக்குவிப்பு சலுகை தரப்படலை.உள்கட்டமைப்புல அதிக கவனம் செலுத்தியிருக்காங்க. மூலதனச் செலவை நிறைய பண்ணப் போறதாச் சொல்லியிருக்காங்க. வேறென்ன வேணும்?’’ என்று கேட்டார் சாமி.

‘‘ஆனா, வருமான வரியில நாங்க பெரிய சலுகைகளை எதிர்பார்த்தோம் சாமி’’ என்றான் அறிவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பட்ஜெட்ங்கிறது ஒரு முக்கியமான நிகழ்வு. அதை மட்டும்வெச்சு சந்தையின் போக்கை நிர்ணயிக்க முயலக் கூடாது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘காசு அதிகம் புரளுதுன்னு சொன்னே... அப்புறம் என்ன... வரியைக் கட்டவேண்டியதுதானே... நிதிப் பற்றாக்குறையையும் கட்டுக்குள்ளவெச்சுக்க வேண்டியிருக்கு; செலவையும் முதலீட்டையும் அதிகமா செய்ய வேண்டியிருக்கு; அப்போ வருமானத்துக்கான வழியை அரசாங்கம் தேடத்தானே செய்யும்...’’ என்று பட்ஜெட்டுக்கு ஆதரவாகப் பேசினார் சாமி.

பட்ஜெட் சந்தைக்கு சாதகமா..?

‘‘இந்த பட்ஜெட் எந்தெந்த செக்டாருக்கு சாதகமா இருக்கும் சாமி?’’ என்று கேட்டேன் நான்.

‘‘இந்த வருட பட்ஜெட்ல உள்கட்டமைப்பு, விவசாய இடுபொருள்கள், எஃப்.எம்.சி.ஜி., லாஜிஸ்டிக்ஸ், மீடியா போன்ற துறைகள் ஓரளவுக்குப் பலன் பெறும். ஐடி சர்வீசஸ், சிமென்ட், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், பவர், ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், மெட்டல்ஸ், மைனிங் போன்ற துறைகளுக்கு பெரிய சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை என்ற நிலையே இருக்கு’’ என்று நிறுத்தினார் சாமி.

‘‘பேங்க் மற்றும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறைகளுக்கு எப்படி இருக்கும் சாமி’’ என்று கேட்டான் அறிவு.

‘‘அந்தத் துறையில் பல பாசிட்டிவ் விஷயங்களும், ஒரு சில நெகட்டிவ் விஷயங் களும் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் எதிர்பார்ப்புகளை பெருசா வளர்த்துக்காம இருக்கப் பழகிக்கோ. இந்தத் துறையில நல்ல லாபம் பார்க்கணும்னா கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவசரப்படாதே’’ என்றார்.

‘‘சாமி, அப்படியே மத்த துறைகள் பத்தியும் கொஞ்சம் விளக்கமா சொல்லிடுங்களேன்...’’ என்று நாங்கள் இருவருமே கோரிக்கை வைத்தோம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு ‘‘சொல்லிட்டா போச்சு...’’ என்று ஆரம்பித்தார். ‘‘விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கறதால நடுத்தரகாலம் முதல் நீண்டகால அளவில் விவசாய இடுபொருள் துறைக்கு இந்த பட்ஜெட் சாதகமாக இருக்குன்னு சொல்லலாம். பாசனம், வருமானத்தைப் பெருக்குவதற்கான ஆதரவு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள், விளைபொருள்கள் சேமிப்பு, விநியோகம், ப்ராசஸிங்... இதையெல்லாம் செய்யறதுக்கான திட்டங்களும் இருக்குங்கறதால இதைச் சொல்றேன்.

“இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையைப் பொறுத்த வரை, சாலைகள் மற்றும் ரயில்வே துறைக்கான செலவுகள் அதிகமா செய்யப்படுறதுக்கான வாய்ப்பு இருக்கு!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையைப் பொறுத்த வரை, சாலைகள் மற்றும் ரயில்வேதுறைக்கான செலவுகள் அதிகமா செய்யப்படுறதுக்கான வாய்ப்பு இருக்கு. அடுத்த ஐந்து வருடங்கள்ல நூறு லட்சம் கோடி அளவுக்கான திட்டங்கள் சொல்லப்படுது. அதே மாதிரி ஷிப்பிங் மற்றும் ஏவியேஷன் துறைகளையும் சொல்லலாம். பி.எம்.ஏ.ஒய்., ஸ்மார்ட் சிட்டிகள், அம்ருத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கறதையும் இந்தத் துறைக்கான பாசிட்டிவ் விஷயமாகவே முதலீட்டாளர்கள் பார்க்கணும். ஆனா, இந்தத் துறையில இருக்குற எல்லா நிறுவனங்களும் பயன் பெறும்னு சொல்லிடவும் முடியாது’’ என்ற சாமிக்கு தொண்டை கரகரக்கவே, தண்ணீர் குடித்தார்.

பட்ஜெட்
பட்ஜெட்

‘‘லாஜிஸ்டிக்ஸ் துறையைப் பொறுத்தவரை கன்ட்ரோல்டு அக்செஸ் ஹைவேக்கள், எகனாமிக் காரிடார்கள், துறைமுகத்தை அணுகும் சாலைகள் அமைத்தல், ஸ்ட்ராட்டஜிக் ஹைவேக்களை கட்டுமானம் செய்தல் போன்றவற்றுக்கான திட்டங்கள் இருக்கறதால, இந்தத் துறைக்கு இது ஓரளவுக்கு சாதகமான பட்ஜெட்தான். இதன் பலன்களெல்லாம் கொஞ்சம் நடுத்தரகால அளவில் தெளிவாக வெளிப்படும்கிறதை மறந்துடாதீங்க.

மீடியா துறையைப் பொறுத்தவரை, நியூஸ் பிரின்ட், தினசரி அச்சிடுவதற்கான பேப்பர், புத்தகங்கள் அச்சிடும் லைட் வெயிட் பேப்பர் போன்றவற்றுக்கான சுங்கவரியைக் குறைச்சிருக்கறது இந்தத் துறையில செயல்படும் ஒருசில நிறுவனங்களுக்கு பாசிட்டிவான விஷயம்.

ஃபேன்கள், ஒப்பனைக்கான சாதனங்கள், சிறிய எலெக்ட்ரிக் அப்ளையன்ஸ்கள்... இதுக்கெல்லாம் இறக்குமதிக்கான சுங்க வரியை அதிகரிச்சிருக்கறது இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்பாக இருக்கும். வாங்கக்கூடிய விலையில் வீடு கட்டுறது, சோலார் பம்புகளுக்கான திட்டங்கள், கிசான் ரயில் அறிமும், பி.பி.பி மாடலில் அதிக ரயில்கள் விடுவதற்கான திட்டங்கள் இதெல்லாம் இந்தத் துறைகள்ல இயங்கும் ஒரு சில நல்ல , நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு பாசிட்டிவான செய்தியாக இருக்கும்.

ஆக மொத்தத்துல, சந்தைக்குச் சாதகமாத்தான் பட்ஜெட் இருக்குது. ஒண்ணை மட்டும் ஞாபகம்வெச்சுக்கோ. பட்ஜெட்ங்கிறது ஒரு முக்கியமான நிகழ்வு. அதை மட்டும்வெச்சு சந்தையின் போக்கை நிர்ணயிக்க முயலக் கூடாது. இன்னும் நிறைய விஷயங்கள் சந்தையின் போக்கை நிர்ணயிக்குது.

நாம எத்தனை வருஷமா பழகிட்டு இருக்கோம்... பத்து வருஷத்துக்கு முன்னாடி நாம சந்திச்சோம். அன்னிக்கு நிஃப்டி 5100-ங்கற லெவல்ல இருந்துச்சு. இப்போ 12100-ங்கற லெவல்ல இருக்கு. இந்த இடைப்பட்ட காலத்துல எத்தனை பட்ஜெட்கள், எத்தனை விஷயங்கள் நடந்திருக்கு... ஆனாலும் சந்தை மேலே மேலேனு போய்க்கிட்டுதானே இருக்கு... நீண்டகால முதலீட்டாளரா சிந்திக்கப் பழகிக்கோங்க. நல்ல பங்குகள்ல முதலீடு பண்ணுங்க. நீண்டகாலத்தில் பலன் நிச்சயமா கிடைக்கும்’’ என்று சொல்லி எழுந்துவிட்டார் சாமி.

“சாமி, ஏதாவது பங்குகள் சொன்னா நல்லாயிருக்குமே...” என்று தயங்கியபடி நாங்கள் கேட்க, ‘‘அடேய், என்னை வம்புல மாட்டிவிடலாம்னு பார்க்குறீங்களாடா...’’ என்று எங்கள் இருவரையும் முறைத்தபடியே சாப்பிட அழைத்துச் சென்றார் ஷேருச்சாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism