Published:Updated:

பட்ஜெட் 2020: உள்கட்டமைப்பை மேம்படுத்த, இன்ஃப்ரா ஃபாண்டு மீண்டும் அறிமுகம்! #Budget2020

பட்ஜெட்
பட்ஜெட்

100 லட்சம் கோடி முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிலையில், இன்ஃப்ரா ஃபாண்டு அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி, கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகளே ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை நிர்ணயிக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், நாட்டின் செழிப்பையும் நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிக மூலதனம் பலவகைகளில் தேவைப்படுகிறது. அவற்றில் ஒன்று உள்கட்டமைப்பு பங்கு பத்திரம் மூலம் கிடைக்கும் மூலதனம்.

Budget 2020
Budget 2020

`National Infra structure pipe line'-ன் 2019-2025 ஆண்டுக்கான டாஸ்க் போர்ஸ் (task force) அறிக்கையை நிதியமைச்சர் சென்ற மாதம் வெளியிட்டார். 2024- 25 GDP யாக 5 ட்ரில்லியன் டாலரை இந்தியா அடைவதற்கு 1.4 ட்ரில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். பொருளாதாரச் சட்டம் 2010-ன் படி உள்கட்டமைப்பு பத்திரம் வழங்கும் திட்டம், வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ், ஏப்ரல் 1, 2011 முதல் 80CCF-ஆக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இப்பிரிவின்படி ரூபாய் 20,000-க்கு உள்கட்டமைப்பு பத்திரத்தை வாங்குவதில் முதலீடு செய்யும் தனிநபருக்கு வருமானத்திலிருந்து வரிச்சலுகை அளிக்கப்பட்டிருந்தது. பிரிவுகள் 80C, 80CC மற்றும் 80CCD பிரிவுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட வருமான தள்ளுபடி தொகையுடன், 80CCF பிரிவுக்குத் தனியாகத் தள்ளுபடி வழங்கப்பட்டது.

பட்ஜெட் 2020: மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்குமா? #Budget2020 #VikatanPhotoCards

உள் கட்டமைப்பின் பங்குப் பத்திரத்தில் முதலீடு செய்வது ஒரு வருடத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருந்தது. வருமானவரி ஆண்டு 2012-13-ல் இது நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த முதலீட்டுக்கான வருமான தள்ளுபடியைக் குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. இந்த உள்கட்டமைப்பு பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டின் மூலம் வருமான வரி சட்டத்தின் கீழ் 80CCF பிரிவில் தனிநபர் வரிச்சலுகையும், சேமிப்பும் செய்யும்படியாகவும், நாட்டின் உள்கட்டமைப்பு பராமரிப்புக்கு உதவும்படியாகவும் அமைந்தது.

budget 2020
budget 2020

மறுபடியும் இந்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு என்று தனியாகத் தள்ளுபடி வழங்காமல், 80C பிரிவின் கீழ் தள்ளுபடி வழங்க நிதியமைச்சர் மறுபரிசீலனை செய்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான உள்கட்டமைப்பை மேம்படுத்த மிகப் பெரிய முதலீடு தேவையாக உள்ளது. இப்பத்திரத் திட்டத்தைத் திரும்ப அறிமுகம் செய்வதால் நாட்டுக்குத் தேவையான முதலீடு கிடைக்கும். மேலும், தனிநபர்கள் முதலீடு செய்யும் மூலதனம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்.

100 லட்சம் கோடி முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிலையில், இன்ஃப்ரா ஃபாண்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பின் செல்ல