“நல்ல முயற்சி... உங்களுடைய பரிந்துரைகளை மனதில்கொள்கிறேன். அனைத்தையும் பரிசீலித்து, வாய்ப்புள்ளவற்றை எல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்” - ஜனவரி 19-ம் தேதியன்று சென்னையில் தன்னைச் சந்தித்த விவசாயிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு இப்படி உறுதிகொடுத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

‘பட்ஜெட்’ என்றாலே தேசத்தின் உயிர்நாடியாக இருக்கும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்கு உதவும் வகையில், விவசாயிகளின் எதிர் பார்ப்புகளை மத்திய அரசிடம் சேர்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது பசுமை விகடன்.

இதற்காக, ‘மத்திய பட்ஜெட் 2020-2021 வேளாண்மை வளர்ச்சிக்கான முன்ஆலோசனைக் கூட்டம்’ கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. முன்னோடி விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அனைத்து ஆலோசனைகளும் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு இறுதியாக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சரிடம் நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் மூலமாக அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப் பட்டது. சென்னைக்கு வரும்போது நேரடியாகச் சந்திக்க நேரம் ஒதுக்குவதாக நிதியமைச்சர் தரப்பி லிருந்து அன்பான பதில் கிடைத்தது. அதன்படியே சென்னை வந்த அமைச்சரை, விவசாயிகள், பொருளாதார நிபுணர்களுடன் சந்தித்தார் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன். அன்புடன் வரவேற்ற அமைச்சர், அனைவரிடமும் கலந்துரை யாடினார்.

“விவசாய நகைக்கடனுக்கான வட்டி மானிய திட்டத்தை நிறுத்தியது, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

“இந்தத் திட்டத்துக்கான முழுப்பலனும் விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை. நகரத்தில் உள்ளவர்கள்கூட விவசாயிகளின் பெயரில் மானியம் பெற்றனர். ஆகையால்தான், நிறுத்தினோம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.

“இடுபொருள் செலவைக் குறைத்து விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய முறைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்திப் பொருள்களுக்குச் சாகுபடிச் செலவுடன் 50 சதவிகித விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” எனப் பல்வேறு கோரிக்கைகளும் விவசாயிகள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டன.

அனைத்தையும் பரிசீலிப்பதாகச் சொன்ன அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘விவசாயிகளுடன் அதிக நேரம் கலந்துரையாடவே விரும்புகிறேன். ஆனால், போதுமான நேரமில்லை. உங்கள் அத்தனை பேரையும் சந்தித்தது நிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது” என்று சொல்லி விடை கொடுத்தார்.

நல்லது நடக்கட்டும்!