பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பசுமை செழிக்க பட்ஜெட் பரிந்துரை!

பட்ஜெட் பரிந்துரை
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் பரிந்துரை

“வாய்ப்புள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுகிறோம்''

ட்ஜெட்... எந்த நாட்டுக்குமே, மாபெரும் நிதித்திருவிழாதான். அதிலும் இந்திய விவசாயிகளுக்கு, மாபெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் திருவிழா. அந்த வகையில், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இந்த ஆண்டு புதிதாகப் பாலம் போட்டிருக்கிறது பசுமை விகடன்.

விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பாக துறை சார்ந்த வல்லுநர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை அழைத்து 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளைத் தயாரிக்கத் திட்டமிட்ட பசுமை விகடன், சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இதற்கான கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் மற்றும் குழுவினர்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் மற்றும் குழுவினர்

‘கூட்டுறவு வங்கிகள்போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க்கடன்; `விவசாயம்’ என்ற பெயரில் இயங்கிவரும் பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயக் கடன்கள் வழங்கத் தடை; ஆதார்போல விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான தனிப்பதிவேடு தயாரிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வகைப்படுத்தப்பட்டன. இவற்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில், பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் நமக்கு உதவிகள் செய்தார். ஜனவரி 19-ம் தேதியன்று சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சரை விவசாயிகள், பொருளியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும மேலாண் நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன் சந்தித்தார்.

அன்பாக வரவேற்றுப் பேசிய நிதியமைச்சர், “வாய்ப்புள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுகிறோம்'' என்று உறுதியளித்தார். அணைப் பாதுகாப்பு சட்டப் பிரச்னைகள் குறித்துப் பேசப்பட்டபோது, “பசுமை விகடன் சார்பில், நீர்ப்பாசனம் குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஜல்சக்தி அமைச்சரைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். அவருடன் விவசாயிகளைக் கூட்டி விவாதியுங்கள்'' என்று ஆக்கபூர்வமான ஆலோசனை தந்தார் அமைச்சர்.

அமைச்சரின் நம்பிக்கையான வார்த்தைகளால் அகமகிழ்ந்து விடைபெற்றனர் விவசாயிகள்.