Published:Updated:

``பிறக்கும் குழந்தையும் 1.25 லட்சம் கடனோடு பிறக்கிறது’’: தெலங்கானா அரசை சாடிய நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன்

மாநிலத்தில் விவசாயிகளின் கடன் அதிகமாக உள்ளது. 100-ல் 91 விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் தெலங்கானா நான்காவது இடத்தில் உள்ளது.

``பிறக்கும் குழந்தையும் 1.25 லட்சம் கடனோடு பிறக்கிறது’’: தெலங்கானா அரசை சாடிய நிர்மலா சீதாராமன்!

மாநிலத்தில் விவசாயிகளின் கடன் அதிகமாக உள்ளது. 100-ல் 91 விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் தெலங்கானா நான்காவது இடத்தில் உள்ளது.

Published:Updated:
நிர்மலா சீதாராமன்

நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கென நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தெலங்கானா
தெலங்கானா

இந்நிலையில், ஒதுக்கப்பட்ட தொகை வரம்புக்கு அதிகமாகவே கடன்களைத் திரட்டி உள்ளதாக, தெலங்கானாவில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைக் குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செப்டம்பர் 1-ம் தேதி அவ்வரசைக் கடுமையாகச் சாடி, நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட, தெலங்கானா அரசு அதிகப்படியான கடனை திரட்டியுள்ளது. கடன்கள் குறித்து மாநிலத்திடம் கேள்வி கேட்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு.

மாநிலத்தில் விவசாயிகளின் கடன் அதிகமாக உள்ளது. 100-ல் 91 விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் தெலங்கானா நான்காவது இடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் பலன்களும் விவசாயிகளைச் சென்றடையவில்லை.

விவசாயி
விவசாயி

அதோடு மத்திய அரசின் திட்டங்களைப் பெயரை மாற்றி மாநில திட்டங்களாகத் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி செயல்படுத்தி வருகிறது. `நமது கிராமம், நமது பள்ளி’ என்பது மத்திய அரசின் திட்டம்; அதை மாநில அரசின் திட்டமாகக் காட்டி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், சுமார் 1.25 லட்சம் ரூபாய் கடனை சுமந்துகொண்டு பிறக்கிறது’’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.