Published:Updated:

பட்ஜெட்டுக்கு அடுத்த நாளே அதிரடி!- சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.57 பைசா உயர்வு

எம்.குமரேசன்

பட்ஜெட்டுக்கு அடுத்த நாளே மக்களுக்கு சுமை ஏறியது!

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு

பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த நாளே சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.57 பைசா உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு
டீசல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.

தேர்தல் சமயங்களில் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்து வந்தன. தேர்தல் முடிந்த பிறகு, உடனடியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மூன்று நாள்களாக சென்னையில் பெட்ரோல் விலை ரூ.73.19-க்கும் டீசல் விலை ரூ.67.96 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு

இதற்கிடையே , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், எண்ணெய் பொருள்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து பெட்ரோல் விலை 2.57 பைசா உயர்ந்து ரூ.75.76-க்கும் டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.