Published:Updated:

Union Budget 2021 எதிரொலி... சென்செக்ஸ் 2,300 புள்ளிகள், நிஃப்டி 640 புள்ளிகள் ஏற்றம்!

பட்ஜெட் எதிரொலியால் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் ஏற்றம்
பட்ஜெட் எதிரொலியால் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் ஏற்றம்

பட்ஜெட்டின் மீது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு காரணமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே உயர்வுடன் தொடங்கியது பங்குச்சந்தை.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் ஆகிய இரண்டிலும் கடும் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் வரை சரிந்தது. இதற்கு, 'பட்ஜெட் மீதான அச்சத்தால் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை விலக்கிக் கொள்கிறார்கள்' என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மெட்ரோ விரிவாக்கம், தொழில் வழித்தடம்... மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள்?

ஆனால், பட்ஜெட் தாக்கல் தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் 292 புள்ளிகள் அதிகரித்து 46,578 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 59 புள்ளிகள் அதிகரித்து 13,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay

பட்ஜெட்டின் மீது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு காரணமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை, தற்போது 14.44 மணி அளவில் மேலும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வரை உயர்ந்து 48,577 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 638 புள்ளிகள் உயர்ந்து 14240 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியில் எவ்விதமான தளர்வுகளையும் அறிவிக்காத போதிலும், புதிய வரிகளை விதிக்காதது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அளித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு