Published:Updated:

தமிழக பட்ஜெட்... சில கேள்விகள், சில சந்தேகங்கள்!

தமிழக பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்... சில கேள்விகள், சில சந்தேகங்கள்!

தமிழக பட்ஜெட்

Published:Updated:
தமிழக பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
தமிழக பட்ஜெட்

நடப்பு 2022 - 23-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி. டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18-ம் தேதி சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார். தி.மு.க பதவிக்கு வந்த பின் சமர்ப்பிக்கும் முதல் முழு பட்ஜெட் இதுதான் என்பதாலும், தேர்தல் வாக்குறுதிகள் சம்பந்தமாக அறிவிப்புகள் வரும் என்பதாலும் பலத்த ஆவலுடன் இந்த பட்ஜெட்டை எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த பட்ஜெட்டில் சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

வி.தியாகராஜன் 
ஆடிட்டர்
வி.தியாகராஜன் ஆடிட்டர்

இன்னும் குறைக்கப்பட வேண்டிய வருவாய் பற்றாக்குறை...

மத்திய அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய கடந்த ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை வந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)என்பது நமது அன்றாட வீட்டுச் செலவுகளுக்கு நமது வருமானம் போதுமானதாக இல்லாமல் இருப்பது போன்றதாகும். நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) என்பது புதிய வீடு வாங்க நமது வருமானம் போதுமானதாக இல்லாமல் இருப்பது போன்றதாகும். வீடு என்கிற சொத்தை வாங்குவதற்கு கடன் வாங்கலாம், தவறில்லை. ஆனால், அன்றாட செலவுகளுக்குக் கடன் வாங்குவது அபாயகர மானதாகும்.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் வருவாய் பற்றாக்குறை என்பது இருக்கவே கூடாது என்பதுதான். 2021-22-ம் நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் திட்டமிடப்பட்ட 4.15 சதவிகிதத்திலிருந்து 3.08 சதவிகிமாகக் குறைந்து இருந்தாலும், வருவாய் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

அதேபோல, மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை திட்டமிடப் பட்ட 4.33 சதவிகிதத்திலிருந்து 3.80 சதவிகிதமாகக் குறைந்து இருப்பது சற்று ஆறுதல் தருகிறது. இது 15-வது நிதிக்குழு வரையறுத்துள்ள 4.5 சதவிகிதத்துக்கு கீழ் இருப்பதாகக் கூறினாலும், இந்த சதவிகிதமானது 3 சதவிகிதத்துக்கும் கீழ் இருப்பதுதான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.

தமிழக பட்ஜெட்...
சில கேள்விகள், சில சந்தேகங்கள்!

ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி...

மாநிலத்தின் மொத்தக் கடன் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2022 - 23-ல் 26.29 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைக்குள் இருப்பதாகச் சொல்லப் பட்டாலும், இது 25 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதே நல்லது என்று பொருளாதார நிபுணர்களால் சொல்லப் படுகிறது. ஏனென்றால், நிதிக் குழு பரிந்துரை சதவிகிதங்கள் என்பது கொரோனா காலத்துக்காக சற்று தளர்த்தப்பட்டது. அதுவும் போக தமிழக அரசு வாங்கிய கடனுக்காக வட்டியாக மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.87 கோடி வட்டி கொடுப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.

மின்சாரத் துறையில் ரூ.2 லட்சம் கோடி கடன்...

இதைத் தவிர, தமிழக மின்சாரத்துறை மற்றும் போக்கு வரத்து துறையில் ரூ.2 லட்சம் கோடி கடன்கள் இருப்பதாக ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட் டுள்ளது. இதையும் கூட்டினால் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் கடன் தொகை எச்சரிக்கை அளவையும் மீறி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வரி வருமானம் இன்னும் அதிகரிக்க வேண்டும்...

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவிகிதமாக இருக்கிறது. 2005-ம் நிதியாண்டில் இது 9 சதவிகிதமாக இருந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.மாநிலத்தின் மொத்த வருமானத்தில் மாநிலத்தின் சொந்த வருமானம் அதிகமாக இருப்பதே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மீண்டும் அந்த நிலையை மாநிலம் எப்போது எட்டும் எனத் தெரியவில்லை.

எதிர்காலம் குறித்த சில கேள்விகள்...

மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, மாநிலத்தின் கடன் தொகை ஆகியவை மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதமாக பார்க்கும்போது வரையறுக்கப் பட்ட அளவை தாண்டியுள்ளது. இதைக் கட்டுக்குள் கொண்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தி வருமானத்தையும் அதிகப்படுத்தி னால் மட்டுமே இது சாத்தியமாக இருக்கும். இதற்கான ஆலோசனை களை மாநில அரசால் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் குழு பரிந்துரைக்கும் என நம்பப்படுகிறது.

கோயில் நகைகளை உருக்கும் திட்டம்...

கோயில் நகைகளை உருக்கி விற்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்த அரசால் தெரிவிக்கப்பட்டது அந்தத் திட்டம் சரி, தவறு என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அத்திட்டத்தை பற்றி பட்ஜெட்டில் எந்த விவரமும் சொல்லப்பட வில்லை .அதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும், அந்தத் தொகை எப்படிச் செலவிடப்படும் என்பன போன்ற மதிப்பீடுகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. இதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது பல யூகங்களுக்கும், சந்தேகங் களுக்கும் வழிவகுத்துவிடும்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, மோசமாகச் செயல்படும் நிறுவனங்களை என்ன செய்ய போகிறார்கள், அந்த நிறுவனங்களில் தமிழக அரசுக்கு உள்ள பங்கு முதலீட்டை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டடப்படுமா என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஏனென்றால் நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தமிழக அரசின் 60 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சாரத் துறையும், போக்குவரத்துத் துறையும் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பது நிதிநிலை அறிக்கையிலேயே வெட்ட வெளிச்சமாகத் தெரிய வந்தது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக பட்ஜெட்...
சில கேள்விகள், சில சந்தேகங்கள்!

தேர்தல் வாக்குறுதி என்னவானது?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு மாநிலத்தின் கடன் அதிகமாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், இந்தப் புள்ளி விவரங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியும் என்பதால் அதை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை வருகிற நான்கு ஆண்டுகளில் படிப்படியாகச் செய்வோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி கூறினாலும், அதற்கான வருமானம் எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில் இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

மொத்தத்தில் வரும் நான்காண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்றப்படுமா என்ற எதிர்பார்ப் போடும், மாநிலத்தின் நிதி நிலைமை சீரடையுமா என்ற கேள்வியோடும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.