வருமான வரி செலுத்தும் பெரும்பாலானவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விஷயம், இந்த பட்ஜெட்டில் நிறைவேறியிருக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத அளவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வருமான வரி வரம்பு 5%, 20%, 30% என இருந்தது. தற்போது 5%, 10%, 15%, 20%, 25%, 30% என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. (பார்க்க, அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை). அது குறித்து ஓர் அலசல்...

புதிய வருமான வரி விகிதம்

சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமார், “புதிய வருமான வரி வரம்பு வரவேற்கத்தக்கது. இதன்படி வரியைக் கணக்கிட்டு சலுகை வரியைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வரிச் சலுகைகள் மற்றும் வரித் தள்ளுபடிகள் எதையும் பெற முடியாது. 2019-20-ல் உள்ளபடி அதிக வரி செலுத்தும்பட்சத்தில், தற்போதுள்ள 80சி, 80டி போன்ற வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

புதிய வருமான வரி விகிதம், இதுவரை வரிச் சலுகை கோராதவர்களுக்கு லாபமாக இருக்கும். ஏற்கெனவே வரிச் சலுகை பெற்றுவருபவர்களுக்கு பழைய வரி வரம்பு, புதிய வரி வரம்பு இரண்டில் எது லாபகரமாக இருக்கும் என்பது அவர்கள் எந்த அளவுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கும். அந்த வகையில், இந்த இரண்டு முறைகளில் எது லாபகரமாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால்தான் தெரியும்’’ என்றார்.

பட்ஜெட் அறிவிப்பின்போது, ‘‘ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர், புதிய வரி முறையில் வரிச் சலுகைகள் எதையும் கோரவில்லையென்றால், ரூ.1.95 லட்சம் வரி செலுத்துபவராக இருப்பார். பழைய வரி முறை என்றால், ரூ.2.73 லட்சம் வரி செலுத்தியிருப்பார். அந்த வகையில் புதிய வரி முறை மூலம் ரூ.78,000வரை மிச்சப்படுத்தியிருப்பார்’’ என்றார் நிதியமைச்சர்.

எஸ்.சதீஷ்குமார், ‘‘புதிய வரி விகிதத்தைப் பயன்படுத்தினால், 80சி-யின்கீழ் பிராவிடன்ட் ஃபண்ட், ஆயுள் காப்பீடு பாலிசி பிரீமியம், திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல் உள்ளிட்ட வரிச் சலுகைகளைப் பயன்படுத்த முடியாது. அடிப்படை வரி வரம்பு ரூ.2.5 லட்சம் அப்படியே உள்ளது. கடந்த ஆண்டைப்போலவே வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவர்களுக்கு 87ஏ பிரிவின்கீழ் ரூ.12,500 வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் அடிப்படை வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்திருந்தால், அனைவருக்கும் இந்த வரிச் சலுகை கிடைத்திருக்கும்.

வருமான வரிச் சலுகைக்கான முதலீடுகளை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வருமானப் பிரிவினராக இருக்கிறார்கள். அவர்கள் பயன்படும்விதமாக 80சி பிரிவின் வரிச் சலுகை முதலீட்டு வரம்பை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சம் அல்லது ரூ. 3 லட்சமாக அதிகரித்திருக்கலாம்.மத்திய அரசு வரி வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை என்பதற்காக இப்படியொரு குழப்பமான வரிவிகித நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 22 சதவிகிதமாக வரியைக் குறைத்திருக்கும் நிலையில், தனிநபர்களுக்கு மட்டும் 30% வரி என்பது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.

வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு வீட்டுக் கடன் வரிச் சலுகை நீடிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு வரிச் சலுகை..!

வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு (Affordable Housing) அளிக்கப்படும் வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேங்க் பஜார் டாட் காம் சி.இ.ஓ அதில் ஷெட்டி, ‘‘வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு வீட்டுக் கடன் வரிச் சலுகை நீடிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இந்தச் சலுகை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

ஒருபக்கம் பார்த்தால் இந்த பட்ஜெட் வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. ஆனால், பட்ஜெட்டை ஊன்றிப் படித்து, அலசி ஆராய்ந்தால் தனிநபர்களைவிட அரசுக்கே அதிக ஆதாயம் இருப்பதுபோல் தெரிவதை மறுப்பதற்கில்லை!