நடப்பு
Published:Updated:

ட்விட்டர் சர்வே: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் எப்படி?

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்.

2019-20-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் எப்படி என்று நாணயம் ட்விட்டரில் ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் கிடைத்த தகவல்கள் இந்த பட்ஜெட் பற்றி தமிழக மக்களின் மனநிலையைக் காட்டுவதாக இருக்கிறது.

ட்விட்டர் சர்வே
ட்விட்டர் சர்வே

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 55% பேர், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் இந்த வேளையில், வேலைவாய்ப்பு களும் குறைவாகவே இருக்கிறது; வேலைவாய்ப்பினை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கத் திட்டம் எதுவுமில்லை என்பதால் மக்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர் களில் 24% பேர், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிசெய்யும் எனச் சொல்லி யிருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் பொருளாதாரத்தில் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லாவிட்டாலும், நீண்ட காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை செய்வதாகவே அமையும் என்பதால், இப்படிச் சொல்லியிருக்கலாம்.

ட்விட்டர் சர்வே: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் எப்படி?

இந்த சர்வேயில் கருத்து சொன்னவர் களில் 21% பேர், இது பாஸ் மார்க் பட்ஜெட் என்று சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம் இது மோசமான பட்ஜெட் அல்ல என்பதே இவர்களின் கருத்தாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது தாக்கல் செய்த பட்ஜெட் மிக நல்ல பட்ஜெட் என்று சொல்ல முடியாவிட்டாலும், மிக மோசமான பட்ஜெட் என்று சொல்ல வாய்ப்பில்லை!