Published:Updated:

பட்ஜெட்டில் சாமானியனுக்கு என்ன இருக்கிறது?

பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட்

இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் என்னென்ன?

பொருளாதாரத் தளங்களில் பட்ஜெட் தாக்கல் பற்றிய பரபரப்பு அடங்க வில்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் ஒருபுறமும், ஆளும்கட்சியினர் ஆரவாரம் மறுபுறமும் தொடர்கின்றன. இதற்கிடையில், நடுநிலையான விமர்சனத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் இந்த பட்ஜெட்டில் சாமானியனுக்கு என்ன இருக்கிறது என்பதை, பலரும் பேசவேயில்லை!

பட்ஜெட் பற்றி பொருளாதார நிபுணர்கள்தான் பேச வேண்டும் என்றில்லை. அன்றாடம் உழைக்கும் கூலித்தொழிலாளர்கள் தொடங்கி உழைக்கும் நடுத்தரவர்க்கத்தினர் வரை பட்ஜெட் பற்றிப் பேச வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பட்ஜெட்டின் நிதிக் கொள்கை, வரிச்சலுகைகள், வரிவிகிதங்கள் இவர்களின் அன்றாட வாழ்க்கையில் தான் பெரும் தாக்கங்களை ஏற்படுத்து கின்றன.

வி.தியாகராஜன் ஆடிட்டர்
வி.தியாகராஜன் ஆடிட்டர்

2019-20 நிதியாண்டுக் கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.24.61 லட்சம் கோடி. ஆனால், 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.21.63 லட்சம் கோடி மட்டுமே. இது முந்தைய பட்ஜெட்டை விட ரூ.2.97 லட்சம் கோடி குறைவு. காரணம், ஜி.எஸ்.டி வரி வசூல் மற்றும் நிறுவன வரி வசூலில் ஏற்பட்ட சுணக்கம். அதேசமயம், தனிநபர் வருமானவரி கட்டுவதில் எந்தத் தொய்வும் இல்லை. அவர்கள் கண்ணும் கருத்துமாக வரி கட்டிவருகிறார்கள். ஆனால், சாமானி யர்களான அந்தத் தனிநபர்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத் துவம் தரப்பட்டிருக்கிறதா என்றால், ‘பெரிதாக ஒன்றுமில்லை’ என்பதே நிஜம்!

இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் என்னென்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
  • தனிநபருக்கான வரிவிதிப்பு, முன்பு மூன்று அடுக்குகளாக இருந்தது. தற்போது இது ஆறு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு அடுக்கில் பயன்பெற வேண்டுமானால், எந்தவிதமான வருமானக் கழிவுகளும் வரிவிலக்கும் கிடையாது. மேலும், பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப் பட்டுள்ளன. இதை ஒரு சாமானியன் எப்படிப் புரிந்து கொள்வான் என்று அரசு கவலைப்படவேயில்லை. புதிய வரிவிகிதம் சிறந்ததா, பழைய வரிவிகிதம் சிறந்ததா என்பதை ஆடிட்டரின் உதவி இல்லாமல் தனிநபர் மேற்கொள்வது கடினம். நிதி ஆண்டின் இறுதியில் வருமானவரிச் சலுகையைப் பெற ஆடிட்டரைத் தேடுவதற்குப் பதிலாக, நிதி ஆண்டின் ஆரம்பத்திலேயே எந்த வரிமுறையைத் தேர்வுசெய்வது என்று கேட்க ஆடிட்டரைத் தேட வேண்டியிருக்கிறது.

பட்ஜெட்
பட்ஜெட்
  • வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீடு, ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி திவாலானால் வங்கியில் டெபாசிட் செய்த பணம் போய்விடுமே என இனி அஞ்சத் தேவையில்லை. ஐந்து லட்சம் ரூபாய் வரை வங்கியில் டெபாசிட் செய்திருந்தால், அந்தப் பணம் திரும்பக் கிடைத்துவிடும். இது ஆறுதலான விஷயம். ஆனால், ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் டெபாசிட் செய்திருந்தால், அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே திரும்ப கிடைக்கும்.

  • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் தரப்படும் வட்டி மானியத்தொகை, அடுத்த ஓராண்டுக்கு (மார்ச் 2021) நீட்டிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • பத்திரப்பதிவு மதிப்பில் ரூ.45 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் வீடு வாங்குவதற் கான கூடுதல் வட்டி, வருமானக் கழிவான 1.5 லட்சம் ரூபாய் (பிரிவு 80 EEA-ன்கீழ்) அடுத்த ஓராண்டுக்கு (மார்ச் 2021) நீட்டிக்கப் பட்டுள்ளது.

  • டிவிடென்ட் விநியோக வரியிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, ‘இனி டிவிடென்ட் பெறும் தனிநபரின் வருமானத்தில் சேர்க்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் எந்த வரிவிதிப்பு வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்றபடி இனி டிவிடென்ட் விநியோக வரியைக் கட்ட வேண்டும். இதனால், தனி நபர்களுக்கு பாதிப்பு ஏற்படவே செய்யும்.

  • வரி விதிப்பையும் வரித் தாக்கலையும் எளிமைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து மேலும் சிக்கலாக்கிவிட்டார்கள். இதனால் சாமானிய மனிதன் வரித் தாக்கல் செய்வதற்கான செலவு அதிகரிக்கும். மேலும், புதிய வரிவிகிதங்கள் மக்களின் சேமிப்புப் பழக்கத்தைக் குறைக்கும். இது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.

  • மாதச் சம்பளக்காரர்கள்கூட பரவாயில்லை. அவர்களில் பலர் அரசுத் துறையிலும் அமைப்புரீ தியிலான தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்கிறார்கள். ஆனால், கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த பட்ஜெட்டால் எப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளாகப்போகிறார்கள் என்பதை நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது.

  • கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கம், எப்போதுமே வரி கட்டத் தயங்கியதில்லை. அவர்களின் கவலையெல்லாம், ‘நாம் செலுத்தும் வரிப்பணம் எந்த ஊழலும் இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காக முறையாகச் செலவிடப் படுகிறதா’ என்பதுதான். அதை அரசாங்கங்கள் உறுதிசெய்துவிட்டால், நம் நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் வரியைக் கட்ட அல்ல... கொட்டவும் தயாராக இருக்கிறார்கள். அந்த நிலை என்றைக்கு வருமோ, அன்றைக்குத்தான் நம் நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும்!