நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பட்ஜெட்டில் என்ன வேண்டும்? சொல்லுங்க, ப்ளீஸ்! - கேட்கும் நிதி அமைச்சகம்!

புதிய பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பட்ஜெட்

புதிய பட்ஜெட் பற்றிய தனது யோசனைகள், பரிந்துரைகளை www.mygov.in என்கிற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்!

வ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வந்ததும் அதில் அது இல்லை, இது இல்லை என்று புலம்புவதை விட, பட்ஜெட் பற்றிய நமது அபிப்ராயத்தை இப்போதே தெரிவித்தால், அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பலன் நம் எல்லோருக்கும் கிடைக்கும். எப்படி?
பட்ஜெட்டில் என்ன வேண்டும்? சொல்லுங்க, ப்ளீஸ்! - கேட்கும் நிதி அமைச்சகம்!

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார அலுவல்களுக் கான (Department of Economic Affairs) துறைதான் பட்ஜெட்டைத் தயாரிக்கிறது. அதற்காக மத்திய அரசின் 51 அமைச்சகங்களில் இருந்தும் கருத்துகளைப் பெறுகிறது. அத்துடன் நிதி நிபுணர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்தும் நேருக்கு நேர் நடக்கும் நிகழ்ச்சி மூலம் கருத்துகளைப் பெற்று, பட்ஜெட்டுக்கு இறுதிவடிவம் தரப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா காரணமாக நேருக்கு நேர் கலந்துரையாடல் கிடையாது. அதற்கு பதிலாக, பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் வரப்போகும் புதிய பட்ஜெட் பற்றிய தனது யோசனைகள், கருத்துகள், பரிந்துரைகள் அனைத்தையும் MY GOV (www.mygov.in) என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

பட்ஜெட்டில் என்ன வேண்டும்? சொல்லுங்க, ப்ளீஸ்! - கேட்கும் நிதி அமைச்சகம்!

பொருளாதாரம் மற்றும் நிதி, விவசாயம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில், வர்த்தகம், திறன்மேம்பாடு, சேமிப்பு, முதலீடு, வங்கிக்கடன், வருமான வரி ஆகிய பல்வேறு பொருள்கள் குறித்ததாக இருக்கலாம்.