Published:Updated:

`விவசாயிகளுக்காக அறிமுகமாகுமா இந்த 2 மெகா திட்டங்கள்?' #Budget2020

பட்ஜெட்
பட்ஜெட்

நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில், சுமார் 500-600 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (1.2.2020) தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அரசாங்கம் இரண்டு மெகா திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிர் பலவகைப்படுத்துதல் (crop diversification) மற்றும் விவசாயிகள் கூட்டமைப்புக்கு நிதியுதவி ஆகிய இவ்விரண்டு திட்டங்களும் நீண்ட நாட்களாக விவசாயிகளால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த முக்கியமான இரண்டு திட்டங்களும் வெளியிடப்படவிருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஐந்தாண்டுகளில் அரசு 10,000 விவசாயக் கூட்டமைப்புகளை நிறுவும் என்று அறிவித்திருந்தார். இந்த விவசாயிகள் கூட்டமைப்புகள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அவர்களது வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். வேளாண் அமைச்சகம் இக்கூட்டமைப்புகளுக்கு நிதியுதவி, பயிற்சியளித்தல் மற்றும் இதர உதவிகளையும் செய்யும்.

`விவசாயிகளுக்காக அறிமுகமாகுமா இந்த 2 மெகா திட்டங்கள்?' #Budget2020

சிறந்த உற்பத்திக்காகத் தொழில்நுட்பரீதியிலான உதவிகளையும் அரசாங்கம் அவர்களுக்குச் செய்யும். விவசாயக் கூட்டமைப்புகளால் ஈட்டப்படும் லாபம், அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளிடையே பகிரப்படும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலவே, இக்கூட்டமைப்புகளும் அவற்றின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காகத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைக்கொண்டிருக்கும்.

பட்ஜெட் 2020: நிதி அமைச்சரைத் தேடிவந்த 19,000 பரிந்துரைகள்! #Budget2020 #VikatanPhotoCards

``பாதுகாப்பற்ற வருமானம் காரணமாக, விவசாயக் கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வருவதே இல்லை. விவசாயத்துக்காகக் கடன் கிடைக்காமல் இருப்பதே விவசாயக் கூட்டமைப்புகள் சந்தித்துவரும் முக்கியச் சவாலாகும். அரசாங்கத்தின் நிதியுதவி கிடைத்தால், உரிய நேரத்தில் எளிய முறையில் வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம். இது இக்கூட்டமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்" என்பது ஒட்டுமொத்த விவசாயக் கூட்டமைப்புகளின் கருத்தாக இருக்கிறது.

நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில், சுமார் 500-600 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயம் விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டைக் குறைக்கவும், வேளாண்-சுற்றுச்சூழல் அமைப்பில் சமநிலையைப் பராமரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Agriculture
Agriculture

கடந்த காரிப் பருவத்தில், நெல் சாகுபடிக்குப் பதிலாகச் சுமார் 50,000 ஹெக்டேர் அளவுக்கு மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கான திட்டத்தை ஹரியானா தொடங்கியது. இதற்கான இலவச விதைகள், இலவசக் காப்பீடு மற்றும் உள்கட்டமைப்புக்காக, ஏக்கருக்கு சுமார் ரூ.2,000 நிதியுதவியை அரசு செய்தது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல