Published:Updated:

இரண்டு வகை வரிக் கணக்கீடு... யாருக்கு எது பெஸ்ட்?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

புதிய முறையைப் பின்பற்றி வரியைக் செலுத்தும்பட்சத்தில் பி,எஃப்., திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல் உள்ளிட்ட எந்த வரிச் சலுகையையும் பெற முடியாது.

இரண்டு வகை வரிக் கணக்கீடு... யாருக்கு எது பெஸ்ட்?

புதிய முறையைப் பின்பற்றி வரியைக் செலுத்தும்பட்சத்தில் பி,எஃப்., திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல் உள்ளிட்ட எந்த வரிச் சலுகையையும் பெற முடியாது.

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

லவிதமான எதிர்பார்ப்புகளுக்கு இடையே தாக்கலாகியிருக்கிறது 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் பலரும் எதிர்பார்த்ததைப்போல வருமான வரிச் சலுகைகள் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி கூடவே நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கே.ஆர்.சத்திய
 நாராயணன், கோபால 
கிருஷ்ண ராஜு
கே.ஆர்.சத்திய நாராயணன், கோபால கிருஷ்ண ராஜு

வரி வரம்பில் மாற்றங்கள்!

தற்போது வருமான வரி வரம்பு 5%, 20%, 30% என இருக்கிறது. இது 2020-21–ம் நிதியாண்டில் 5%, 10%, 15%, 20%, 25%, 30% என மாற்றியமைக்கப்படுகிறது. அதேநேரத்தில் அடிப்படை வரம்பு மாற்றப்படவில்லை. அது ரூ.2.5 லட்சமாகத் தொடர்கிறது. இதன் மூலம் ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி 5% சதவிகிதமாகத் தொடர்கிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், இனி 20% வருமான வரிக்கு பதிலாக 10% வரி செலுத்தினால் போதும். ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள், இனி 20% வருமான வரி செலுத்துவதற்கு பதிலாக 15% செலுத்தினால் போதும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இனி 30% வரிக்கு பதிலாக 20% செலுத்தினால் போதும். ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி செலுத்தாமல், 25% வரி செலுத்தினால் போதும். ரூ.15 லட்சத்துக்குமேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றமில்லை.

சலுகை இல்லை!

புதிய முறையைப் பின்பற்றி வரியைக் செலுத்தும்பட்சத்தில் பி,எஃப்., திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல் உள்ளிட்ட எந்த வரிச் சலுகையையும் பெற முடியாது. தற்போதுள்ள முறையில் வரியைச் செலுத்தினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* கூடுதலாகச் செலுத்த வேண்டிய வரி
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டிருப்பது ஓர் உத்தேசமான கணக்கீடு மட்டுமே. தனிநபர்களுடைய வருமானம் மற்றும் வரி விலக்கு கோருதல் போன்றவற்றுக்கு ஏற்ப வருமான வரி மாறுதல் ஏற்படும்.
* கூடுதலாகச் செலுத்த வேண்டிய வரி குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டிருப்பது ஓர் உத்தேசமான கணக்கீடு மட்டுமே. தனிநபர்களுடைய வருமானம் மற்றும் வரி விலக்கு கோருதல் போன்றவற்றுக்கு ஏற்ப வருமான வரி மாறுதல் ஏற்படும்.

புதிய மற்றும் பழைய வரி விதிப்பு முறைக்கும் இடையே என்ன வித்தியாசம், யாருக்கு எது லாபகரமாக இருக்கும் என்பதை சென்னையின் முன்னணி ஆடிட்டர்களிடம் கேட்டோம்.

யாருக்கு எது சரி?

முதலில் ஆடிட்டர் கே.ஆர்.சத்திய நாராயணிடம் பேசினோம். “வருமான வரி விஷயங்களுக்கு ஆடிட்டர்களை அணுகி, அவர்கள் மூலமாக அனைத்தும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இனி இருக்காது. ஏனெனில், வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புதிய வரி விதிப்பு முறையை மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளுமே நடைமுறையில் இருப்பதால், யாருக்கு எது தேவை என்பதை வரி செலுத்துபவர்களே முடிவு செய்துகொள்ளலாம். உதாரணமாக, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் வருமானம் வருகிறது என்றால், இதற்கான வரி ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ.12,500; ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை ரூ.1 லட்சம் என மொத்தம் 1,12,500 ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2020-21-ம் நிதியாண்டில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய முறையில் ரூ.10 லட்சம் வருமானத்துக்கு எப்படி வரி செலுத்த வேண்டும் எனில், ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் வரை வரி ரூ.12,500. ரூ.5 லட்சம் - ரூ.7.5 லட்சம் வரை கட்டவேண்டிய வரி ரூ.25,000. ரூ.7.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை கட்ட வேண்டிய வரி ரூ.37,500 என மொத்தம் வரியாகக் கட்ட வேண்டிய தொகை ரூ.75,000. பழைய வரி விதிப்பைவிட, புதிய வரி விதிப்பில் 37,500 ரூபாயைச் சேமிக்க முடியும். இது எந்தவொரு வரி விலக்குகளும், கழிவுகளும் இல்லாமல் போடப்பட்ட கணக்கீடு.

இரண்டு வகை வரிக் கணக்கீடு...  யாருக்கு எது பெஸ்ட்?

ஆனால், ரூ.10 லட்சம் வருமானம் சம்பாதிக்கக்கூடிய ஒருவர், 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.25,000 பிரீமியம், 80சிசிடி (1பி)-யில் ரூ.50,000, இது தவிர திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.2 லட்சம், வாங்கக்கூடிய விலைக்கான கூடுதல் வட்டிச் சலுகை ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெற்றால், பழைய வரி விதிப்பு முறைதான் அவருக்கு லாபகரமாக இருக்கும். ஏனெனில், மேலே குறிப்பிட்டிருக்கும் வரிச் சலுகைகளைப் பயன்படுத்தும் போது, ரூ.10 லட்சம் வருமானம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய மொத்த வரியும் கழிவுகளில் போய்விடும். எனவே, வரி கட்ட வேண்டியதில்லை’’ என்றார்.

வரி வரம்பு வரவேற்கத்தக்கது!

ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு, “மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பலரும் ஈட்டும் வருமானத்துக்கு ஏற்றபடி முறையாக வரியைச் செலுத்துவதில்லை. வரிக் கழிவுக்கான வசதிகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை. இன்றைய நிலையில் இந்தியாவில், வருமானம் ஈட்டக்கூடிய இளைஞர்கள் (சராசரி வயது 40) 68% பேர் இருக்கிறார்கள். அவர்களில் 7% பேர் மட்டுமே வருமான வரியை முறையாகச் செலுத்துகிறார்கள். இவர்களைக் கருத்தில்கொண்டுதான் இந்தப் புதிய வரி வரம்புகளை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது.

`ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி எதுவும் இல்லை’ என்று பரவலாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. இது சரியல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய வரி விகிதம், இதுவரை வரிச் சலுகை கோராதவர்களுக்கு லாபகரமாக இருக்கும். ஏற்கெனவே வரிச் சலுகை பெற்று வருபவர்களுக்குப் பழைய வரி வரம்பு, புதிய வரி வரம்பு இரண்டில் எது லாபகரமாக இருக்கும் என்பது அவர்கள் எந்த அளவுக்கு வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறும்’’ என்றார் தெளிவாக.

Income tax
Income tax

ரூ.5 லட்சம் வரை...

`ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி எதுவும் இல்லை’ என்று பரவலாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. இது சரியல்ல. வருமான வரி அடிப்படை வரம்பு 2020-21-ம் நிதியாண்டிலும் ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், ரூ.12,500 வரிச் செலுத்த வேண்டும். ஆனால், ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு, அரசாங்கம் 12,500 ரூபாயை வரித் தள்ளுபடியாக வழங்குகிறது. அந்த வகையில் ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்தத் தேவையில்லை. பழைய முறை மற்றும் புதிய முறை இரண்டிலும் ஒரே கணக்கீடுதான்.

உங்களுடைய சேமிப்பு மற்றும் இதர விஷயங்களைக் கணக்கிட்டு, உங்களுக்கு எந்த வரி விதிப்பு முறை லாபமாக இருக்கும் என்பதைத் தீர்மானியுங்கள். இதற்கு ஒரு ஆடிட்டரிடமிருந்து ஆலோசனை பெறுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism