Published:Updated:

சிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? #DoubtOfCommonMan

கைதி
News
கைதி

சிறையிலிருக்கும் கைதிகளில், தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் விசாரணைக் கைதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம்.

Published:Updated:

சிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? #DoubtOfCommonMan

சிறையிலிருக்கும் கைதிகளில், தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் விசாரணைக் கைதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம்.

கைதி
News
கைதி

"தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை. ஆனால், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தேர்தல்களில் வாக்களிக்க உரிமை உள்ளதா? வாக்களிப்பதற்காகக் கைதிகள் பரோலில் வெளியே வரமுடியுமா?"

கைதி
கைதி

இப்படியொரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார், வாசகர் ஷ்யாம்.

இந்தக் கேள்வியை சிறைத்துறை அதிகாரிகள் முன்வைத்தோம். "சிறையிலிருக்கும் கைதிகளில் தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் விசாரணைக் கைதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம். அதுவும் தபால் வாக்குகள் மட்டுமே அளிக்க முடியும். யாரையும் வாக்களிப்பதற்காக பரோலில் அனுப்புவதற்கு சட்டம் அனுமதிப்பதில்லை.

கைதி
கைதி

தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, வாக்களிக்கத் தகுதியுள்ள கைதிகளில் 'யார் யாருக்கு தபால் வாக்களிக்க விருப்பமுள்ளது' என்று சிறை நிர்வாகம் சார்பில் கேட்கப்படும். விருப்பமுள்ள கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்குரிய ஆவணங்கள் தயார் செய்யப்படும். தபாலில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

ஆனால் நடைமுறையில், பெரும்பாலான சிறைகளில் இதைக் கேட்பதில்லை என்பதே உண்மை. சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதுமே அதிகபட்சமாக 50 கைதிகள்தான் தபால் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்" என்கிறார்கள், சிறைத்துறை அதிகாரிகள்.

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கின்றனவா? இங்கே கேளுங்கள்...