Published:Updated:

கலெக்டர்களிடம் மாற்றத்தை உருவாக்குமா தலைமைச் செயலாளரின் உத்தரவு?

ஆ.பழனியப்பன்

''பட்டா மாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், அடிப்படைத் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கு உயிரூட்ட வேண்டும்.

 தலைமைச் செயலாளர்
தலைமைச் செயலாளர்

மாவட்டங்களில் அரசின் திட்டங்களை அமல்படுத்துவது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது உட்பட முக்கியமான விஷயங்களைக் கண்காணிப்பவர்களாக, வழிநடத்துபவர்களாக இருப்பவர்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

ஆனால், 'மாவட்ட ஆட்சியர்களில் பலர் களப்பணிக்குச் செல்வதில்லை' என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக, அதிரடியான சில உத்தரவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பிறப்பித்துள்ளார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம்.

'கிராமங்களுக்கு அடிக்கடிச் செல்லுங்கள். அரசின் திட்டங்கள், மக்களுக்கு முழுப் பலனையும் அளிப்பதை உறுதிசெய்யுங்கள்'

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வுபெற்ற பிறகு, புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற பின்னர், சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

அதில் ஒன்றாக, மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'கிராமங்களுக்கு அடிக்கடிச் செல்லுங்கள். அரசின் திட்டங்கள், மக்களுக்கு முழுப் பலனையும் அளிப்பதை உறுதிசெய்யுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ''பட்டா மாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், அடிப்படைத் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கு உயிரூட்ட வேண்டும். பொருளாதார மேம்பாட்டின் மூலம் கிராமங்களை மாற்றுவது, குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமான ஒன்று.

குடிசை வீடுகளைக் கணக்கெடுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கான்கிரீட் வீடுகளைக் கட்ட ஏழைகளுக்கு உதவ வேண்டும். நிலையான நீர்ப்பாதுகாப்பு முறையை உருவாக்க, மக்கள் பங்கேற்புடன் பணிகள் நடைபெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

கலெக்டர்களிடம் மாற்றத்தை உருவாக்குமா தலைமைச் செயலாளரின் உத்தரவு?

அதற்கு, குடிமராமத்து போன்ற திட்டங்களைப் பயன்படுத்துங்கள். விவசாயம், விவசாயம் சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்'' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

> "களத்துக்குச் செல்லுங்கள்!" என கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகளின் தன்மை குறித்து உரிய பின்புலங்களுடன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயத்தின் முக்கியக் கருத்துகளை ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/