Published:Updated:

காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா? #DoubtOfCommonMan

பொருள்கள்
News
பொருள்கள்

உணவுப் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியும். உணவுப் பொருள்களின் தரம் குறைவாக இருந்தாலும் இவர்களிடம்தான் புகார் அளிக்க வேண்டும்.

Published:Updated:

காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா? #DoubtOfCommonMan

உணவுப் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியும். உணவுப் பொருள்களின் தரம் குறைவாக இருந்தாலும் இவர்களிடம்தான் புகார் அளிக்க வேண்டும்.

பொருள்கள்
News
பொருள்கள்

காலாவதியான பொருள்களை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால், சில கடைகளில் காலாவதி தேதியை மாற்றிவிட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

காலாவதியான பொருள்கள்
காலாவதியான பொருள்கள்

``காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள்மீது காவல் துறையில் புகார் அளிக்க முடியுமா..? நுகர்வோர் குறைதீர் மன்றம், மாவட்ட ஆட்சியரிடமெல்லாம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதற்கு நீண்டநாள்கள் ஆகின்றன. அதற்குள், காலாவதிப் பொருள்களை விற்பனை செய்த வியாபாரி தப்பித்துவிடுகிறார். பல கடைகளில், ரெடிமேட் இட்லி மாவு, பால் பாக்கெட் போன்றவைகளின் தேதி காலாவதியானாலும் அவற்றைத் திருத்தி மீண்டும் விற்கின்றனர். இதைத் தடுக்க காவல் துறையில் புகார் அளிக்கலாமா? IPC Section 273-ன்கீழ் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?" என்று விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், கோபாலகிருஷ்ணன் என்ற வாசகர்.

எல்லா வகையான பொருள்களுக்கும் தயாரிப்புத் தேதி (Mfg Date) குறிப்பிடப்படவேண்டியது அவசியம். அதிலும், `பேக்’ செய்யப்பட்டுள்ள உணவுப்பொருள்களில் இது அவசியம் இடம்பெற வேண்டும். எண்ணெய், பால் போன்ற பொருள்களைப் பாத்திரங்கள் அல்லது வேறு ஏதாவது கலம்களில் வாங்கினால் இந்தத் தேதியைக் கேட்க வாய்ப்பில்லை. ஆனால், பாக்கெட்டுகளில் எந்த உணவுப்பொருளை அடைத்து விற்பனை செய்தாலும் அதில் தயாரிப்புத் தேதியை அச்சிட வேண்டும் என்பதோடு, அந்தப் பொருள் காலாவதியாகும் தேதி அல்லது எத்தனை நாள்வரை அதைப் பயன்படுத்தலாம் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காலாவதியான பொருள்
காலாவதியான பொருள்

ஒரு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் இருந்தாலோ, எடை குறைவாக இருந்தாலோ தொழிலாளர் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான நாளைத் தாண்டியும் ஓர் உணவுப்பொருள் விற்பனை செய்யப்பட்டால், அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டியது உணவுப் பாதுகாப்புத் துறை. முன்பு, உள்ளாட்சி அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்த சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டு வந்த இந்தப் பணியை இப்போது உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இத்தகைய காலாவதியான பொருள்களை விற்பனை செய்தால் அந்தப் பொருள்களை இந்தத் துறையினர் பறிமுதல் செய்கின்றனர். எனவே, காவல்துறையில் புகார் அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. உணவுப் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமுடியும். உணவுப்பொருள்களின் தரம் குறைவாக இருந்தாலும் இவர்களிடம்தான் புகார் அளிக்க வேண்டும். ரெடிமேட் இட்லி மாவு, பால் பாக்கெட் போன்றவை கெட்டுவிட்டாலும் காவல் துறையில் புகார் அளிக்க முடியாது. காவல் துறைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஒரு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் இருந்தாலோ, எடை குறைவாக இருந்தாலோ தொழிலாளர் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் போன்றவற்றை காவல் துறை பறிமுதல் செய்யலாம். அவற்றை விற்பனை செய்வோர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம். இட்லி மாவு பாக்கெட் வாங்கி, அது கெட்டுப்போய் கடைக்காரர்மீது அதைத் தூக்கி எறிந்து, அவர் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து தாக்கினால் காவல் துறையிடம்தான் போக வேண்டும். சமீபத்திய உதாரணம்... எழுத்தாளர் ஜெயமோகன் மீதான தாக்குதல்..!

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கின்றனவா? இங்கே கேளுங்கள்...

#DoubtOfCommonman
#DoubtOfCommonman