Published:Updated:

வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா? #DoubtOfCommonMan

வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா?
News
வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா? ( #DoubtOfCommonMan )

``தனது பெயரின் பின் சாதியின் பெயரைச் சேர்த்து எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இல்லை. ஆயினும், இன்னும் ஒரு சில வட்டாரங்களில் இருந்துகொண்டுதான் உள்ளது. அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. ஆனால்..."

Published:Updated:

வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா? #DoubtOfCommonMan

``தனது பெயரின் பின் சாதியின் பெயரைச் சேர்த்து எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இல்லை. ஆயினும், இன்னும் ஒரு சில வட்டாரங்களில் இருந்துகொண்டுதான் உள்ளது. அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. ஆனால்..."

வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா?
News
வண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா? ( #DoubtOfCommonMan )
``விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், வாகனங்களின் நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... சட்டமும் விதிமுறைகளும் என்ன சொல்கின்றன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வீரகுமார் என்ற வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தனித்தனி பதிவு எண் வழங்கப்படுகிறது. அந்த எண்களைக் கொண்ட நம்பர் பிளேட் வாகனங்களில் பொருத்தப்படுகிறது. வாடகைக்குச் செல்லும் வாகனங்கள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள், தனியார் வாகனங்கள் என ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனி நிறம்கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், பலர் தங்களுக்குப் பிடித்தமான டிசைன்களில் ஆங்கிலம், தமிழ் என நம்பர் பிளேட்களில் எழுதிக்கொள்கின்றனர். அவ்வாறு எழுதலாமா, சட்டம் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் அருணிடம் கேட்டோம்.

Vehicles
Vehicles
Photo: Vikatan / Muthukumar.A

``நம்பர் பிளேட்களில் தாராளமாக தமிழ் எழுத்துகளில் எழுதலாம். எண் பலகை இவ்வாறுதான் இருக்க வேண்டும் எனச் சட்டம் இல்லை. எனவே, தமிழ் எழுத்துகளில் எழுதுவது சட்டத்திற்கு எதிரான செயல் ஆகாது. காவலர்களுக்கு எண்களைப் புரிந்து கொள்வதற்குச் சற்று சிரமமாக இருப்பது மட்டுமே இதில் பின்னடைவு. மற்றபடி சட்டத்தில் வண்டியின் நம்பர் இவ்வாறுதான் எழுதி இருக்கவேண்டும். தமிழ் எழுத்துகளில் இருக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைவரும் தங்களின் வாகனங்களில் அவர்களின் தாய்மொழியைக்கொண்டுதான் நம்பர் பிளேட்டுகளில் எண் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலும் தற்போது எண் பலகை தமிழில் எழுதுவது பரவலாக உள்ளது. இது வரவேற்கக் கூடிய விஷயம்தான். ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகாது.

தமிழில் நம்பர் பிளேட் எழுதிய வாகனங்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் சென்றால் ஏதேனும் பிரச்னை வருமா?

எந்தப் பிரச்னையும் வராது. நம்பர் பிளேட் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் வேறு மாநிலத்துக்குச் செல்லும்போது, NOC சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நம்பர் பிளேட்டால் சட்டப்படி எந்தப் பிரச்னையும் வராது. ஆனாலும் வேறுமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும்போது எண்களை 1234 என்ற வடிவத்தில் எழுதுவது நல்லது. எந்த இடத்திலும் குழப்பம் வராமல் இருக்கும்.

`வாகனங்களில் சாதியின் பெயரை சிலர் எழுதுகிறார்கள்... அது சரியா' என்றதற்கு,``தனது பெயரின் பின் சாதியின் பெயரைச் சேர்த்து எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இல்லை. ஆயினும், இன்னும் ஒரு சில வட்டாரங்களில் இருந்துகொண்டுதான் உள்ளது. அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யமுடியாது. ஆனால், தனது சாதியை அடையாளப்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் வசனங்கள் எழுதினால், அந்த வண்டியின் உரிமையாளர் மீது வன்முறையைத் தூண்டும் சட்டம் ஆர்டிகள் 153A, இன ரீதியாக, மொழி ரீதியாகப் பிரிவினையைப் பேசினால் ஆர்டிகள் 503, 504 கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். சாதியைக் குறிக்கும் வகையில் நிறங்களை வண்டியில் பயன்படுத்தியிருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாது. ஏனென்றால் சாதியின் பெயரில் செயல்பட்டு வரும் கட்சிகளின் நிறமாக அது உள்ளது. சட்டத்தில் கட்சிக் கொடியின் நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி இல்லை. எனவே, நிறத்தையும் சாதியின் பெயரையும் வண்டியில் குறிப்பிட்டிருந்தால் அது சட்டத்திற்கு எதிரான செயல் அல்ல” என்றார்.

மேலும், ``வாகனங்களில் சாதி சார்ந்த வசனங்களை எழுதுவது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கலாம். எனவே, கவனமாக இருப்பது நல்லது. தாய்மொழியில் எழுதுவதும், சாதிப் பெயரை எழுதுவதும் ஒன்றல்ல என்ற அடிப்படை புரிந்துணர்வு நமக்கு இருக்கவேண்டியது அவசியமான ஒன்று." என்றார்.

வழக்கறிஞர் தெரிவித்துள்ள கருத்தை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கூறி விளக்கம் கேட்டோம். ``மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி -50, துணை விதி -2 (provision of rule-50, sub-rule-2)-ன்படி வாகன நம்பர் பிளேட்களில் எழுத்துகளை ஆங்கிலத்திலும், எண்களை அரபிக் நியூமரிக்கல் முறையிலும் ( 1, 2, 3 ) எழுதவேண்டும் என்று போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 41 (6), இந்திய அரசின் கீழ் ஒரு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது (ஜூன் 12, 1989 தேதியிட்டது). காவல்துறையினரும், மக்களும் விபத்து சமயங்களில் எளிதில் அடையாளம் காண்பதிலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கண்டறிவதில் சிரமங்கள் இருப்பதாலும் பிராந்திய மொழிகளில் எண்களை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அனைவரும் இதையே பின்பற்றவேண்டும்." என்றார் அவர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man