அலசல்
சமூகம்
Published:Updated:

பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் கஞ்சா சாக்லேட்! - தடுத்து நிறுத்துமா காவல்துறை?

கஞ்சா சாக்லேட்
பிரீமியம் ஸ்டோரி
News
கஞ்சா சாக்லேட்

கடந்த சில தினங்களில் மட்டும் சென்னை, கோவை நகரங்களில் போதைப்பொருள் கலந்த ‘கஞ்சா சாக்லேட்’ விற்ற பத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

`கஞ்சா சாக்லேட்’ என்னும் போதைப்பொருள் புழக்கம் சமீபகாலமாக தமிழ்நாட்டில் அதிகரித்துவருவதாக `பகீர்’ குற்றச்சாட்டைக் கிளப்புகிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள். சாதாரண சாக்லேட்போலவே காட்சியளிக்கும் இந்த கஞ்சா போதை சாக்லேட்டுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில் அதிக அளவு தயாரிக்கப்படும் இந்த ‘கஞ்சா சாக்லேட்’ எப்படித் தமிழ்நாட்டுக்குள் வருகிறது என்று விசாரித்தோம்.

பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் கஞ்சா சாக்லேட்! - தடுத்து நிறுத்துமா காவல்துறை?
பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் கஞ்சா சாக்லேட்! - தடுத்து நிறுத்துமா காவல்துறை?

இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாம்பலத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வடமாநில நபர் ஒருவர் நடமாடிக்கொண்டிருந்தார். அவரிடம் காவலர்கள் சோதனையிட்டபோது ஒரு பை நிறைய வித்தியாசமான சாக்லேட்டுகளை மறைத்துவைத்திருந்தார். பள்ளி மாணவர்களைக் குறிவைத்து விற்கப்பட்ட அந்த சாக்லேட்டுகள் அனைத்திலும் போதைப்பொருள் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் யாதவ் என்பதும், சென்னை ராயப்பேட்டை பகுதியில், பீடா கடை நடத்திவந்த அமுல்குமார் யாதவ் மூலம் வடமாநிலங்களிலிருந்து இந்த போதை சாக்லேட்டை வாங்கிவந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் அமுல்குமாரைத் தேடிவருகிறோம்.

பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் கஞ்சா சாக்லேட்! - தடுத்து நிறுத்துமா காவல்துறை?
பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் கஞ்சா சாக்லேட்! - தடுத்து நிறுத்துமா காவல்துறை?

இதேபோல, கடந்த சில தினங்களில் மட்டும் சென்னை, கோவை நகரங்களில் போதைப்பொருள் கலந்த ‘கஞ்சா சாக்லேட்’ விற்ற பத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கிலோக்கணக்கில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கஞ்சா சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 20 முதல் 30 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த போதைப்பொருள் கலந்த, ‘கஞ்சா சாக்லேட்டு’களை ரயில்கள் மூலமாகத் தமிழ்நாட்டுக்குள் எடுத்துவருகிறார்கள். முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் சோதனைகளைத் தெரிந்துகொண்டு, வழியிலிருக்கும் ரயில் நிறுத்தங்களிலேயே இவர்கள் இறங்கிவிடுகிறார்கள். அங்கிருந்து சாலை வழியாக இந்த கஞ்சா சாக்லேட்டுகள் நகரங்களுக்குள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது சென்னை, கோவை ஆகிய நகரங்களிலேயே இந்த கஞ்சா சாக்லேட் புழக்கம் அதிகரித்திருக்கிறது. கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, இந்தப் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்” என்றனர் விரிவாக.

சிறார்களையும் இளைஞர்களையும் பாழாக்கும் புதியவகை போதைப்பொருள்களின் பரவலை இரும்புக்கரம்கொண்டு அடக்குமா காவல்துறை?