Published:Updated:

`வெற்று பத்திரத்தில் கையெழுத்து’; வாபஸ் பெறப்பட்ட தொழிலதிபரின் புகார்! - காரணம் ஓ.ராஜாவா?

ஓ.ராஜா
News
ஓ.ராஜா

தன்னைக் கடத்தி ஓ.ராஜா மிரட்டியதாக, காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸில் புகார் கொடுக்க, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. ஒரு வாரத்தில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என விசாரித்தோம்

Published:Updated:

`வெற்று பத்திரத்தில் கையெழுத்து’; வாபஸ் பெறப்பட்ட தொழிலதிபரின் புகார்! - காரணம் ஓ.ராஜாவா?

தன்னைக் கடத்தி ஓ.ராஜா மிரட்டியதாக, காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் போலீஸில் புகார் கொடுக்க, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. ஒரு வாரத்தில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என விசாரித்தோம்

ஓ.ராஜா
News
ஓ.ராஜா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனி. வெளிநாடுகளிலிருந்து ஃபர்னிச்சர் பொருள்களை இறக்குமதி செய்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். காரைக்குடியில் நன்கு அறியப்படும் தொழிலதிபராகவும் இருக்கிரார். இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான, ஓ.ராஜா, பெரியகுளத்தில் தனது குடும்பத்துக்குச் சொந்தமக இயங்கிவரும் பள்ளிக்கு சோஃபா உள்ளிட்ட ஃபர்னிச்சர் பொருள்களை கடந்த 2019-ம் ஆண்டு வாங்கியதாகவும், அதற்கான பணத்தைக் கேட்டபோது, தன்னை மிரட்டுவதாகவும் கூறி காரைக்குடி டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்தார் பழனி.

ஓ.ராஜா
ஓ.ராஜா

பழனி கொடுத்த புகாரில், ``எனக்குக் கொடுக்க வேண்டிய ரூ 2.10 லட்சத்தைத் திருப்பிக் கேட்டதற்கு, அடியாட்கள் மூலம் ஆயுதங்களைவைத்து மிரட்டி, என்னைக் கடத்திச் சென்று கொலை செய்துவிடுவதாக மிரட்டி, வெற்று முத்திரைத்தாள் மற்றும் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே, என்னுடைய பணத்தையும் நான் கையெழுத்து போட்ட வெற்று பத்திரத்தையும் வாங்கிக் கொடுத்து ஓ.ராஜா, அவருடைய மகன் அமர், சென்னையைச் சேர்ந்த குணா, ஹரி, வாசிம், சதிஷ், விஜயமுத்துராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்த பழனி
டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்த பழனி

பழனி, புகார் கொடுத்த ஒரு சில நாள்களில், தனது புகாரை வாபஸ் பெற்றார். பழனியிடம் நாம் பேசினோம். ``எனக்கும் ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுக்கு என்று தெரிந்திருந்தால் நான் என்னுடைய மெட்டீரியலை அனுப்பயிருக்கவே மாட்டேன். சென்னையைச் சேர்ந்த குணாவுக்குத்தான் பொருள்களை அனுப்பினேன். குணாவுக்கும் ராஜா தரப்பினருக்கும்தான் ஏதோ டீலிங் இருந்திருக்கிறது. அவர்களுக்குள் என்ன நடந்ததென்று தெரியவில்லை.

ஓ.ராஜா
ஓ.ராஜா

அந்தச் சம்பவத்தில் என் பணத்தைக் கேட்டதற்கு என்னையே கடத்தி, வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். எனவேதான் பணத்தையும், என்னை மிரட்டி வாங்கிய பத்திரத்திரத்தையும் கேட்டு போலீஸில் புகார் கொடுத்தேன். பின்னர் அவர்களே பணத்தையும் பத்திரத்தையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இது குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை" என்று முடித்துக்கொண்டார்.

காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுந்தர மகாலிங்கத்திடம் பேசினோம், ``புகார்தாரர் பழனி, தன்னுடைய பணத்தை ஏமாற்றியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் புகார் கொடுத்திருந்தார். அது குறித்து விசாரணை நடத்தினோம். செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்ததில், ஓ.ராஜா காரைக்குடி வந்து சென்றதற்கான எந்தத் தடயமும் இல்லை. இருவருக்கும் நேரடித் தொடர்பு இல்லை. எனினும், பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுதான், தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் பழனி. அந்தப் புகார், விசாரணை செய்துகொண்டிருந்தபோதே வாபஸ் பெறப்பட்டதால், அதில் வேறு எந்த அப்டேட்டும் இல்லை" என்றார்.

டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்த பழனி
டி.எஸ்.பி அருணிடம் புகார் கொடுத்த பழனி

இது குறித்து ஓ.ராஜாவிடம் போனில் பேசினோம். “எனக்கும் புகார் கொடுத்த காரைக்குடிக்காரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் என்னுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நான் சும்மா விடப்போவதில்லை. அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரவிருக்கிறேன்” என்றார் கோபமாக.