Published:Updated:

உக்ரைன்-ரஷ்யா: ``பொதுமக்கள் இறப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!" - இந்தியா கருத்து

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
News
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

``உலகின் எந்தப் பகுதியிலும் உள்கட்டமைப்பைக் குறிவைத்து பொதுமக்களின் மரணத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது." - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரின் ஆரம்ப நாள்களில் உக்ரைன் மோசமான தாக்குதலுக்குள்ளானபோதிலும், கடந்த பல மாதங்களாகவே மிகப்பெரிய அளவில் எந்தவொரு தாக்குதலும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று ரஷ்யா திடீரென, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட சில முக்கிய நகரங்களில், 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து ஐ.நா சபையில், உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யா கோரிக்கை வைத்தது. இதன்காரணமாக, ரஷ்யாவுக்கெதிராக உலக நாடுகள் பலவும், கடும் கண்டனங்களை முன்வைத்தன.

ஐநா
ஐநா

இதில், ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து வாக்களித்தது. இந்த நிலையில், உக்ரைன்மீதான ரஷ்யாவின் நேற்றைய தாக்குதல் குறித்து, ``பொதுமக்களின் இறப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இந்தியா கூறியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆஸ்திரேலியாவில், லோவி நிறுவனத்தில்(Lowy Institute) உரையாற்றிய இந்திய வெளியுறவுத்திரை அமைச்சர் ஜெய்சங்கர், ``உலகின் எந்தப் பகுதியிலும் உள்கட்டமைப்பைக் குறிவைத்து பொதுமக்களின் மரணத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாங்கள் உண்மையில் நினைக்கிறோம். இந்த மோதல் இன்று உலகின் பெரும்பகுதியைப் பாதித்துள்ளது, ஏனெனில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் உதவாது" என ரஷ்யாவின் தாக்குதல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.