Published:Updated:

கர்நாடகா: டி.கே.சிவகுமார் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு! - கொதிக்கும் காங்கிரஸ்

டி.கே.சிவகுமார்
News
டி.கே.சிவகுமார்

கர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிகையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாக அந்தக் கட்சி விமர்சித்திருக்கிறது.

Published:Updated:

கர்நாடகா: டி.கே.சிவகுமார் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு! - கொதிக்கும் காங்கிரஸ்

கர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிகையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாக அந்தக் கட்சி விமர்சித்திருக்கிறது.

டி.கே.சிவகுமார்
News
டி.கே.சிவகுமார்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துவருபவர் டி.கே.சிவகுமார். அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபராக அறியப்படும் இவருக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே அதிரடி சோதனைகள் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக டி.கே.சிவகுமார், அவரின் ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

இந்தநிலையில் சட்டவிரோதமாக பணம் சேர்த்த விவகாரத்தில், சி.பி.ஐ-யும் டி.கே.சிவகுமார் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தது. கடந்த ஆண்டில் கர்நாடகா அரசு, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று சி.பி.ஐ., டி.கே.சிவகுமார், அவரின் சகோதரர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திவருகிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூரின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி, கனகபுரா பகுதியிலுள்ள டி.கே.சிவகுமார் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அவருக்குச் சொந்தமான சில இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. மேலும், அவருடைய சகோதரருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. டி.கே.சிவகுமார் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் 9, டெல்லியில் 4, மும்பையில் ஒன்று என மொத்தம் 14 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

கர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ``மோடி, எடியூரப்பா அரசாங்கங்கள் மற்றும் பா.ஜ.க-வின் முன்னணி அமைப்புகள், அதாவது சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் மோசமான முயற்சிகளுக்கு முன் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும். மக்களுக்காகப் போராடுவதும், பா.ஜ.க-வின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதற்குமான எங்களின் தீர்மானம் வலுப்பெற்றிருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும், பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

`கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கவே இந்த ரெய்டு’ என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்தநிலையில் இதுவரை நடைபெற்ற சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கைபற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.