Published:Updated:

திருநள்ளாறு: முன்னறிவிப்பின்றி மத்திய அமைச்சரால் திறக்கப்பட்டதா ஆன்மிகப் பூங்கா? - நடந்தது என்ன?!

ஆன்மிகப் பூங்கா
News
ஆன்மிகப் பூங்கா

திருநள்ளாறு மக்கள் சிலர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆன்மிகப் பூங்கா வாசலில் நின்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது

Published:Updated:

திருநள்ளாறு: முன்னறிவிப்பின்றி மத்திய அமைச்சரால் திறக்கப்பட்டதா ஆன்மிகப் பூங்கா? - நடந்தது என்ன?!

திருநள்ளாறு மக்கள் சிலர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆன்மிகப் பூங்கா வாசலில் நின்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது

ஆன்மிகப் பூங்கா
News
ஆன்மிகப் பூங்கா

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ தர்பாரேண்யேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவான் சந்நிதி அமைந்திருக்கிறது. இங்கு கோயில் நகரத் திட்டத்தின் கீழ் ஆன்மிகப் பூங்கா ஒன்று அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 7.7 கோடி ரூபாய் செலவில் ஆன்மிகப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன. பூங்காவில் தியான மண்டபம், நவகிரகங்களுக்கான தனித்தனி சந்நிதிகள், தீர்த்தகுளம் உள்ளிட்டவற்றுடன்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 கிஷன் ரெட்டி
கிஷன் ரெட்டி

சுற்றுலாப்பயணிகள் சுற்றிப் பார்க்கவும், மன அமைதி ஏற்படுத்தும் இடமாகவும் இந்த இடத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தகைய பணிகள் முழுமை பெறாத நிலையில் திடீரென எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், காரைக்காலில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி எதையாவது திறக்க வேண்டும் என்பதற்காக  திருநள்ளாறில் பிரமாண்டமாக  அமைக்கப்பட்டு வந்த ஆன்மிகப் பூங்காவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை ஆட்சியர், பொதுப்பணிதுறை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டு, திடீரெனக் காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வு திருநள்ளாறு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளைக் கவரும்விதமாக திருநள்ளாறு பகுதியில் ஆன்மிகப் பூங்கா அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்மிகப் பூங்கா
ஆன்மிகப் பூங்கா

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், திருநள்ளாறு மக்கள் சிலர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆன்மிகப் பூங்கா வாசலில் நின்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.