Published:Updated:

`போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும்': சேகுவேராவின் மகள்

பிடல் காஸ்ட்ரோ, சேகுவராவுடன் அலெய்டா குவேரா
News
பிடல் காஸ்ட்ரோ, சேகுவராவுடன் அலெய்டா குவேரா

நான் சேகுவராவின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காக நானும் போராட வேண்டும்.

Published:Updated:

`போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும்': சேகுவேராவின் மகள்

நான் சேகுவராவின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காக நானும் போராட வேண்டும்.

பிடல் காஸ்ட்ரோ, சேகுவராவுடன் அலெய்டா குவேரா
News
பிடல் காஸ்ட்ரோ, சேகுவராவுடன் அலெய்டா குவேரா

கியூபா, பொலிவியா நாடுகளின் விடுதலைக்காகப் போராடியவர் சேகுவேரா. பிறந்தது அர்ஜென்டினாவாக இருந்தாலும் எல்லை கடந்து போராடியவர். உலக கம்யூனிஸ்டுகள் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் தோழராக இன்று வரை சே திகழ்கிறார்.

சேகுவராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா மார்ச் மற்றும் சேகுவெராவின் பேத்தி பேராசிரியர் எஸ்டெஃபானி குவேரா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

சிபிஐ நிகழ்ச்சியில்  அலெடய்டா குவேரா
சிபிஐ நிகழ்ச்சியில் அலெடய்டா குவேரா

அலெய்டா கியூபாவின் மனித உரிமை வழக்கறிஞர், மருத்துவர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். Chavez, Venezuela And New Latin America என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அலெய்டா குவேரா,கேரளாவில் நடந்த மாதர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். கொல்கத்தாவிற்கும் சென்றுள்ளார். அங்கு சதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார்.

அடுத்தகட்ட பயணமாக, அலெய்டா குவேரா சென்னை வருகை தந்தார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு செங்கொடியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அலெய்டா குவேரா "HASTA LA VICTORIA SIMPRE" வெற்றியை நோக்கியே பயணிப்போம் என்றார். நேற்று (ஜனவரி 17) பல நிகழ்வுகளில் அலெய்டா கலந்து கொண்டு உரையாற்றினார். மாமல்லபுரத்துக்கு அழைப்பதற்கு மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா முயன்றதாகவும், ஆனால் சில நெருக்கடிகளால் முடியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிபிஐ நிகழ்ச்சி
சிபிஐ நிகழ்ச்சி

இன்று (ஜனவரி 18) சென்னை தி நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வருகை தந்த அலெய்டா, அங்கு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ``என் தந்தையின் மீது நீங்கள் கொண்டுள்ள பேரன்பை என்னால் உணர முடிகிறது. உங்களின் அன்பின் செயல்பாடுகளுக்கு நன்றி கூறுகிறேன், சிலவற்றுக்கு நன்றி சொல்வதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை. நான் சேகுவராவின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். போராளியின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மனித உரிமைகளுக்காக நானும் போராட வேண்டும் அதற்கான செயல்பாட்டில் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து நம் இலக்கில் வெற்றி கிடைக்கும் வரை செயல்படுவோம்'' என்றார்.