Published:Updated:

பன்னூரா, பரந்தூரா..? சென்னையின் இரண்டாம் விமான நிலையத்துக்கு ஏற்ற இடம் எது?

விமான நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
விமான நிலையம்

கட்டமைப்பு

பன்னூரா, பரந்தூரா..? சென்னையின் இரண்டாம் விமான நிலையத்துக்கு ஏற்ற இடம் எது?

கட்டமைப்பு

Published:Updated:
விமான நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்துக்கு வருகைதரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

எனவே, சென்னையில் இன்னொரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என மத்திய விமானப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்து, அதற்குத் தேவையான இடத்தைத் தேடும் படலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது, இறுதிக்கட்ட இந்த ஆய்வுக்குப் பிறகு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பரந்தூர் ஆகிய இடங்களில் இறுதிக்கட்டப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

பன்னூரா, பரந்தூரா..? சென்னையின் இரண்டாம் விமான நிலையத்துக்கு    ஏற்ற இடம் எது?

இந்த இரண்டு இடங்களில் விமான நிலையம் அமைப்பதற் கான சாதகப் பாதகங்கள், சவால்கள், தடைகள் ஆகியவை என்னென்ன என்பது ஆய்வு செய்யப் பட்டுள்ளது. இதில், சென்னை யின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூரைக் காட்டிலும் பன்னூர் கூடுதலாக சில அம்சங்களைக் கொண்டுள்ள தாகச் சொல்லப்படுகிறது.

விமான நிலையம் அமைக்க பன்னூரில் 4,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. பரந்தூரில் 4,791.29 ஏக்கர் பரப்பளவில் நிலம் கண்டறி யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலுமே இரண்டு ஓடுபாதைகள் மற்றும் வான்வெளி இயங்கங் களுக்குப் போதுமான இடம் இருக்கிறது.

பன்னூர் தளம் சென்னை சென்ட்ரலிலிருந்து தென் மேற்கு திசையில் 55 கி.மீ தொலைவிலும், தற்போதைய விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு திசையில் 44 கி.மீ தொலைவிலும் உள்ளது. பரந்தூர் தளம் சென்னை சென்ட்ரலிலிருந்து தென் மேற்கு திசையில் 70 கி.மீ தொலைவிலும், தற்போதைய விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவிலும் உள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பன்னூர் தளத்தை அடைய சராசரியாக எடுத்துக்கொள்ளும் பயண தூரம் 49 கி.மீ. பரந்தூர் தளத்தை அடைய எடுத்துக் கொள்ளும் பயண தூரம் 73 கி.மீ.

அம்பத்தூரிலிருந்து பன்னூருக்கு சாலை வழி யாகப் பயணித்தால் உள்ள தூரம் 46 கி.மீ. இதற்கு சராசரியாக எடுத்துக்கொள்ளும் பயண நேரம் 1.20 மணி நேரம். அதே சமயம், பரந்தூருக்கு உள்ள 61 கி.மீ. சராசரியாக எடுத்துக்கொள்ளும் பயண நேரம் 1.40 மணி நேரம் ஆகிறது.

இவை தவிர, இந்த இரண்டு இடங்களிலும் உள்ள சவால்கள் என்னென்ன, மனிதனால் உருவாக்கப் பட்டுள்ள தடைகள் என்னென்ன என்பதையும் ஆராய்ந்து பார்க்கப்பட்டிருக்கிறது. பன்னூரில் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் உயர் அழுத்த மின்கம்பங்கள், மொபைல் நெட்வொர்க் டவர்கள் மற்றும் மின் கம்பங்கள் உள்ளன. அதேபோல் பரந்தூரிலும் திட்ட மிடப்பட்டுள்ள தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மொபைல் டவர்கள் உள்ளன. இவற்றால் ஏறபடக் கூடிய தாக்கம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இரண்டு தளங்களிலும் இத்தகைய தடை களுக்கான அதிகபட்ச வரம்பு (Obstacle Limitation Surface) குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்பிறகு, தேவைப்படும்பட்சத்தில் மின்கம்பங்கள், மொபைல்டவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளை மேற்கொள்ள நேரிடலாம் என்கிறார்கள்.

இதுவரையிலான ஆய்வு முடிவுகளிலிருந்து பன்னூர் தளம் விமான நிலையம் அமைவதற்கான அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், மத்திய விமான போக்கு வரத்து ஆணையம், சம்பந்தப்பட்ட மாநில அரசு அமைப்புகளுடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. விமான நிலையம் அமையும் தளத்தின் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு, விமான நிலையம் அமையப்போகும் தளம் இறுதி செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பன்னூரில் அமைந்தாலும் பரந்தூரில் அமைந்தாலும், அதனால் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இதையொட்டி இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெறும் என்பது உறுதி!