Published:Updated:

பட்டினப்பாக்கம்: காலி மது பாட்டில்கள், நெகிழிக் குப்பைகள் - தொடர் தூய்மைப் பணியில் மாநகராட்சி!

தூய்மைப் பணி
News
தூய்மைப் பணி

கடற்கரையில் குப்பைகளின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

Published:Updated:

பட்டினப்பாக்கம்: காலி மது பாட்டில்கள், நெகிழிக் குப்பைகள் - தொடர் தூய்மைப் பணியில் மாநகராட்சி!

கடற்கரையில் குப்பைகளின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தூய்மைப் பணி
News
தூய்மைப் பணி

சென்னை பெருநகர மாநகராட்சி, `ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்' என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி சிங்காரச் சென்னையை, சீர்மிகு சிங்கராச் சென்னையாக்கும் முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. அந்த வகையில், இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் கடந்த சில தினங்களாகத் தூய்மைப் பணி நடந்துவருகிறது. கடற்கரை மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் வீசியெறியப்பட்ட நெகிழிகள், மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் களத்திலிறங்கிச் சேகரித்து அப்புறப்படுத்தினர்.

தூய்மைப் பணி
தூய்மைப் பணி

கடற்கரையில் குப்பைகளின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அங்கு நடைபெற்றுவரும் தூய்மைப் பணி குறித்து நம்மிடம் பேசிய கல்வி, தொடர்பு மற்றும் தகவல்துறை அதிகாரி ஹரி பாலாஜி , ``சென்னை மாநகராட்சியோடு இணைந்து 'ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்' என்ற திட்டம் சென்னையின் பல பகுதிகளில் நடந்துவருகிறது. குப்பை கூளமாகக் கிடக்கும் பகுதிகளைச் சீர்செய்து, கழிவுகளை அப்புறப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள். அதுமட்டுமின்றி மக்களுக்குத் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இந்தத் திட்டத்தின் ஓர் அங்கம். தூய்மைப் பணியாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, புகார் எழும் இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டுவருகிறார்கள்" என்றார்.

தூய்மைப் பணி
தூய்மைப் பணி

தூய்மைப் பணியாளர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சேகரித்த குப்பைகளும், காலி மது பாட்டில்களும் குவியல்களாகக் கிடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

தூய்மைப் பணி
தூய்மைப் பணி