சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆணையரகம், 2021-22 நிதியாண்டில் ரூ.5,412 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 2020-21 நிதியாண்டுடன் (ரூ.4,321.47 கோடி) ஒப்பிடுகையில் ரூ.1,091 கோடி, அதாவது 25.24% அதிகமாகும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் 2021-22 வருவாயான ரூ.41,090 கோடியில், சென்னை தெற்கு ஜி.எஸ்.டி ஆணையரகத்தின் பங்களிப்பு 13.17% (ரூ.5,412 கோடி) ஆகும்.
2022-23 நடப்பு நிதியாண்டில் கடந்த மே மாதம் வரை சென்னை தெற்கு ஜி.எஸ்.டி ஆணையரகம் ரூ.1,626.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தைவிட ரூ.531.72 கோடி அதிகமாகும். அதாவது 48.56% அதிகமாக வரி வசூல் செய்துள்ளது.

உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி பதிவு, குறித்த நேரத்தில் திருப்பி வழங்குதல், பல்க் எஸ்.எம்.எஸ், மக்கள்தொடர்பு நிகழ்ச்சிகள், குறைதீர்ப்பு அமர்வுகள் குறிப்பாக. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் வாயிலாக வரி செலுத்துவோருக்கு இந்த ஆணையரகம் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதாக சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி இணை ஆணையர் டி.ஜெயப்பிரியா தெரிவித்துள்ளார்.
தொடரட்டும் சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையரகத்தின் சாதனை!