Published:Updated:

சென்னை: 'பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு' - நவீன இன்ஜின், ஏசி கோச் போன்ற வசதிகள் வருகின்றன!

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை
News
கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை

பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறு சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இதன் மூலம் நவீன இன்ஜின், ஏசி கோச் போன்ற பல்வேறு நவீன வசதிகளைப் புகுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:

சென்னை: 'பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு' - நவீன இன்ஜின், ஏசி கோச் போன்ற வசதிகள் வருகின்றன!

பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறு சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இதன் மூலம் நவீன இன்ஜின், ஏசி கோச் போன்ற பல்வேறு நவீன வசதிகளைப் புகுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை
News
கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. பல ரயில்வே ஸ்டேஷன்களில் லிஃப்ட் வேலை செய்யவில்லை. கழிவறைகள் மூடப்பட்டிருக்கின்றன. மின்விளக்குகள் எரியவில்லை. முழுவதும் இருட்டாகக் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே இந்த ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். தற்போது அதற்கான பணி விரைவில் தொடங்கவிருக்கிறது. இதை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா), சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செய்யவிருக்கின்றன. இதில் புதிய இன்ஜின், ஏசி கோச், வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன.

மூடியிருக்கும் கழிப்பறை
மூடியிருக்கும் கழிப்பறை
ஜெரோம்

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், "பறக்கும் ரயில்களைத் தற்போது தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதில் மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் நிதியும் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள் மிகவும் பழைமையாக இருக்கின்றன. பயணிகளுக்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இயங்காத லிப்ட்
இயங்காத லிப்ட்
ஜெரோம்

எனவே இதை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கப்பட்டது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில்களைச் இயக்கினால் சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடந்துவந்தது. ஏனெனில், இதில் பணம் முதலீடு செய்ய வேண்டும். மேலும் என்ன மாதிரியான வசதிகளைக் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து திட்டமிட வேண்டியிருந்தது.

இதில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) தலையிட்டு ஆலோசனை நடத்தியது. இதன்படி இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த முடிவுசெய்திருக்கிறோம். ஸ்டேஜ் 1-ல் ரயில் தண்டவாளங்கள், ரயில்களை இயக்குதல், சிக்னல் இயக்கம் போன்றவற்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். ஸ்டேஜ் 2-ல் ரயில்வே ஸ்டேஷன்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) செயல்படுத்தும்.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது. இதில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது. அதில் என்னென்ன வசதிகள் கொண்டுவரலாம் என்றும், ஸ்டேஷன்களில் அறிவிப்பு பலகை உள்ளிட்ட இதர வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விவரமும் இடம்பெறும்.

சிஎம்டிஏ
சிஎம்டிஏ

முன்னதாக ஸ்டேஜ் 1-க்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். இதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பணிகள் விரைவில் தொடங்கும். இதுதவிர ஒவ்வொரு ஸ்டேஷனின் அருகிலும் 500 மீ தூரத்துக்குத் தரமான சாலைகள், தெருவிளக்கு வசதி போன்றவற்றையும் கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம். இதை, சென்னை மாநகராட்சியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஸ்டேஜ்-1 மற்றும் 2 க்கான பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பறக்கும் ரயில்களை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இயக்கும். இதை செயல்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுவதற்கும் ஒரு பிரத்யேகக்குழு அமைக்கத் முடிவு செய்திருக்கிறோம். இந்தக் குழு தற்போது தெற்கு ரயில்வே சம்மந்தப்பட்ட திட்டத்தில் எவ்வளவு செலவு செய்திருக்கிறது, மெட்ரோ எவ்வளவு தொகை மேற்கொண்டு செலவிட வேண்டும்.

மெட்ரோ
மெட்ரோ

அனைத்துப் பெட்டிகளையும் ஏ.சி-யாக மாற்றம் செய்தல், புதிய ரயில் இன்ஜின் பயன்படுத்துதல் போன்றவற்றுக்குச் செய்யவேண்டியவை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கும். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 18-ல் இருந்து 24 மாதங்கள் ஆகிவிடும். ஒவ்வொரு படியாக நாம் தற்போது முன்னேறிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.